வியாழன், 22 ஏப்ரல், 2010

1 எக்ஸ்பி: சின்ன விஷயங்கள்

விண்டோஸ் 7 ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மைக்ரோசாப்ட் வரும் அக்டோபரில் வெளியிட உள்ள செய்தி பரபரப்பாகப் பேசப்படும் இந்நேரத்தில், விண்டோஸ் எக்ஸ்பி தொகுப்புதான் இன்னும் பலரின் டார்லிங் சிஸ்டமாக உள்ளது. ஏனென்றால் விஸ்டா குறிப்பிட்டுச் சொல்லக் கூடிய புதுமையான, எளிதான நிலைத்த வசதி எதனையும் தராத நிலையில், பல தனி நபர்கள் மட்டுமின்றி, நிறுவனங்களும் எக்ஸ்பி தொகுப்பையே பயன்படுத்தி வருகின்றனர். புதிதாகக் கம்ப்யூட்டர் பயன்படுத்தத் தொடங்குபவர்களும், தாங்கள் வாங்கும் கம்ப்யூட்டரில் விஸ்டா இருந்தாலும், தங்களுக்குப் பழகிய எக்ஸ்பியே போதும் என எண்ணி மாற்றிக் கொள்கின்றனர். இத்தகைய எக்ஸ்பி தொகுப்பிற்கான சில சின்ன சின்ன விஷயங்களை, பயன்பாடுகளை இங்கு காணலாம்.

1.ஸ்டார்ட் மெனுவில் அதிக புரோகிராம்:
அடிக்கடி பயன்படுத்தும் ஆறு புரோகிராம்களை ஸ்டார்ட் மெனுவில் பார்க்கலாம். இதில் இன்னும் அதிகமான எண்ணிக்கையில் புரோகிராமினை நீங்கள் வைத்திட விரும்புகிறீர்களா? Start பட்டனில் ரைட் கிளிக் செய்து Properties தேர்ந்தெடுக்கவும். பின் அதில் Customize என்னும் பட்டனில் கிளிக் செய்திடவும். இதில் கிடைக்கும் விண்டோவில் நடுவே உள்ள புரோகிராம்ஸ் பிரிவில் மேல் நோக்கி இருக்கும் அம்புக்குறியை அழுத்தி புரோகிராம்களின் எண்ணிக்கையை அதிகரிக்கவும். அதன் பின் ஓகே அழுத்தி வெளியேறவும். எந்த எண்ணிக்கையில் அமைத்தீர்களோ அந்த எண்ணிக்கை வரை நீங்கள் புரோகிராம்களை ஸ்டார்ட் மெனுவில் வைக்கலாம்.

2. நோ பாஸ்வேர்ட் ப்ளீஸ்:
நீங்கள் ஒருவர் மட்டுமே பயன்படுத்தும் எக்ஸ்பி கம்ப்யூட்டராயிருந்தால் பிறகு எதற்கு ஒவ்வொரு முறை கம்ப்யூட்டரைப் பயன்படுத்தத் தொடங்குகையில் பாஸ்வேர்ட் மற்றும் யூசர் நேம் டைப் செய்திட வேண்டும். எனவே இதனை மாற்றும் வழியை ஏற்படுத்தலாம். ஸ்டார்ட் கிளிக் செய்து பின் ரன் விண்டோவை இயக்கவும். அதில் control user passwords2 என டைப் செய்திடவும். அதில் உங்கள் அக்கவுண்ட்டை செலக்ட் செய்து அதில் ‘Users must enter a user name and password to use this computer’ என்பதில் உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடவும். ஓகே கிளிக் செய்திடவும். இப்போது பாஸ்வேர்ட் கேட்கும். பாஸ்வேர்டைக் கொடுத்துவிட்டு மீண்டும் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

3. விரைவாக வெப்சைட்:
இன்டர்நெட்டில் ஒரு வெப்சைட்டைப் பார்ப்பது என்பது பல நிலை வேலை ஆகும். வெப் பிரவுசரைத் திறக்க வேண்டும். அதில் அந்த தளத்திற்கான முகவரியைத் தவறின்றி டைப் செய்திட வேண்டும். அதன் பின் அந்த தளம் கிடைக்கும். இந்த செயல்பாட்டைச் சுருக்கி எளிதாக்குவோமா? விண்டோஸ் டாஸ்க் பாரிலேயே ஒரு அட்ரஸ் பாரை உருவாக்குவோம். டாஸ்க்பாரில் காலியாக இருக்கும் இடத்தில் ரைட் கிளிக் செய்திடுங்கள். கிடைக்கும் மெனுவில்‘Lock the Taskba’ என்பதன் முன்னே டிக் அடையாளம் இருந்தால் எடுத்துவிடவும். பின் Toolbars என்பதில் மவுஸை நகர்த்தி அதில் Address என்பதில் கிளிக் செய்திடவும். ஒரு சிறிய அட்ரஸ் பார் கிடைக்கும். இதில் எந்த வெப் சைட் அட்ரஸை வேண்டுமானாலும் டைப் செய்து அந்த இணைய தளத்தைப் பெறலாம்.

4. �ஷா டெஸ்க்டாப்:
விண்டோஸ் குயிக் லாஞ்ச் டூல் பாரில் Show Desktop என்னும் ஐகான் நமக்குப் பல வகைகளில் உதவியாய் இருக்கும். ஆனால் சில வேளைகளில் அதைத் தெரியாமல் அழித்துவிடுவோம். அதனைத் திரும்பப் பெற சில சுற்று வழிகள் இருக்கும். அதற்குப் பதிலாக இரண்டு கீ இணைப்புகளில் இவற்றைப் பெறலாம். கண்ட்ரோல்+எம் மற்றும் கண்ட்ரோல் + i Ctrl+M/Ctrl+D ஆகிய கீகள் டெஸ்க் டாப்பைத் தரும் மற்றும் பழைய நிலைக்குக் கொண்டு வரும்.

5. ரீசண்ட் டாகுமெண்ட்ஸ் எதற்கு?
Start மெனு வழக்கமாக அண்மைக் காலத்தில் பயன்படுத்திய பைல்களைக் காட்டும். இது நமக்கு நல்லதுதான். ஆனால் இந்த பைல்களைக் காட்டாமலும் வைக்கலாம். Start பட்டனில் ரைட் கிளிக் செய்திடுங்கள். Properties தேர்ந்தெடுங்கள். Advanced என்னும் டேபிற்குச் செல்லுங்கள். கிடைக்கும் டயலாக் பாக்ஸின் அடிப்பாகத்தில் ‘List my most recently opened documents’ என்று இருப்பதன் எதிரே டிக் அடையாளத்தை எடுத்துவிட்டு ஓகே கிளிக் செய்திடவும்.

6. ஷார்ட் கட் கீ தொகுப்புகள்
விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தில் எக்கச்சக்கமாய் ஷார்ட் கட் கீகள் உள்ளன. இவை அனைத்தையும் ஒருவர் அறிந்து நினைவில் வைத்துக் கொள்வது என்பது கடினமே. இருப்பினும் தொடர்ந்து அவற்றைப் பயன்படுத்தி வந்தால் அல்லது கம்ப்யூட்டரை வேறு செயல்களுக்குப் பயன்படுத்தாதபோது இந்த ஷார்ட் கட் கீகள் எங்கெங்கு இருக்கின்றன என்று கீ போர்டில் உள்ள கீகளை அழுத்திப் பார்த்தால் இந்க கீகள் நம் நினைவிற்கு வரலாம். எடுத்துக் காட்டாக விண்டோஸ் கீயுடன் சில கீகளை அழுத்துகையில் சில செயல்பாடுகள் மேற்கொள்ளப் படுகின்றன. அதனால் விண்டோஸ் கீயை அழுத்திக் கொண்டு F, R, E, L, என சில கீகளை அழுத்தி என்ன நடைபெறுகிறது என்று பார்க்கலாம்.

7. நோட்ஸ் தயாரிக்கலாம்:
நாம் நம் டேபிளில் சிறிய சிறிய பிட் பேப்பர்களில் ஏதாவது எழுதி வைப்போம். குறிப்பாக டெலிபோன் எண்கள், டெலிபோனில் நண்பர்கள் கூறும் செய்திகள் என ஏதாவது இருக்கும். இதே போல் கம்ப்யூட்டரிலும் தகவல்களை பிட் பிட்டாக அமைத்து வைக்கலாம். இவற்றை நோட்ஸ் என்னும் தலைப்பில் அமைத்து விட்டால் தேவைப்படும்போது விரித்துப்பார்க்க எளிதாக இருக்குமே. டெஸ்க் டாப்பில் ரைட் கிளிக் செய்திடுங்கள். பின் கிடைக்கும் மெனுவில் New என்பதனைத் தேர்ந்தெடுங்கள். அதன்பின் Text Document என்பதனைத் தேர்வு செய்திடவும். அதற்கு ‘notes’ எனப் பெயரிடவும். இனி எப்போது இதில் குறிப்புகளை எழுத வேண்டும் என எண்ணினாலும் டபுள் கிளிக் செய்து இதனைத் திறக்கவும். அதன்பின் எப்5 அழுத்தினால் அன்றைய தேதியும் நேரமும் அதில் பதியப்படும். அதன்பின் நீங்கள் எழுத விரும்பும் குறிப்புகளை எழுதவும். எழுதி முடித்தவுடன் கண்ட்ரோல் +எஸ் கீகளை அழுத்தி சேவ் செய்து வெளியேறவும். பின் இதில் என்ன எழுதினோம் என்பதனை நினைவு படுத்திப் பார்க்க மீண்டும் டபுள் கிளிக் செய்து திறக்கலாம்.

8. விண்டோஸ் அப்டேட்:
விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்திற்கு ஒவ்வொரு மாதமும் இரண்டாவது செவ்வாய்க்கிழமை அப்டேட் பைல்களை மைக்ரோசாப்ட் வெளியிடுகிறது. நம் சிஸ்டம் இதனைத் தானாகத் தேடி தன்னைத்தானே அப்டேட் செய்திடும் வகையில் தான் கான்பிகர் செய்யப்படும். ஆனால் ஒரு சில கம்ப்யூட்டர்களில் இது சரியாக அமைக்கப் படுவதில்லை. ஆனால் நாமாக இந்த அப்டேட் பைல்களை கம்ப்யூட்டருக்கு இறக்கிப் பதிந்து கொள்ள ஒரு சிறிய வழியினை உண்டாக்கலாம். இந்த அப்டேட் பைல்கள் பெரும் பாலும் கம்ப்யூட்டருக்குப் பாதுகாப்பினைத் தருவதாக இருப்பதால் இது மிகவும் அவசியமும் ஆகும். இதற்கென ஐகான் ஒன்றை உருவாக்குவது குறித்து பார்க்கலாம். டெஸ்க்டாப்பில் காலி இடத்தில் ரைட் கிளிக் செய்திடவும். பின் நியூ தேர்ந்தெடுத்து அதன் பின் ஷார்ட்கட் என்பதில் கிளிக் செய்திடவும். கிடைக்கும் பாக்ஸில் www.windowsupdate.com என டைப் செய்திடவும். அதன் பின் நெக்ஸ்ட் என்பதில் கிளிக் செய்திடவும். பின் இதில் ஏதாவது பெயர் ஒன்றை டைப் செய்திடவும். ‘Check for updates’ என்று கூட இருக்கலாம். பின் Finish அழுத்தி வெளியேறவும். இனி எப்போதெல்லாம் அப்டேட் பைல்களைக் கொண்டு வரவேண்டும் என எண்ணுகிறீர்களோ அப்போது இந்த ஐகானை டபுள் கிளிக் செய்தால் போதும்.

9. உடனே கால்குலேட்டர்:
கம்ப்யூட்டரில் செயல்பட்டுக் கொண்டிருக் கையில் சில கணக்குகளைப் போட கால்குலேட்டர் தேவையாய் உள்ளது. என்ன செய்கிறீர்கள்? Start அழுத்தி All Programs தேர்ந்தெடுத்து பின் Accessories கிளிக் செய்து கிடைக்கும் மெனுவில் கால்குலேட்டரைப் பெறுகிறீர்கள். அப்பா! படிக்கும்போதே மூச்சு வாங்குதா? சுருக்கு வழி ஒன்று இருக்குதண்ணே! விண்டோஸ் கீயுடன் கீ கீயை அழுத்துங்கள். ரன் விண்டோ கிடைக்கும். அதில் calc என டைப் செய்து என்டர் தட்டுங்கள். உடனே கால்குலேட்டர் கிடைக்கும். இதே போல ரன்விண்டோவில் notepad என டைப் செய்தால் நோட்பேட் புரோகிராம் கிடைக்கும்.

10. நோட்டிபிகேஷன் ஏரியா:
உங்கள் கம்ப்யூட்டரில் நிறைய புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து இயக்கிவிட்டால் டாஸ்க் பாரின் வலது கோடியில் உள்ள நோட்டிபிகேஷன் ஏரியாவில் நிறைய ஐகான்கள் இடத்தை அடைத்துக் கொள்ளும். இதனை சரி செய்திட டாஸ்க் பாரின் காலி இடத்தில் ரைட் கிளிக் செய்து புராபர்ட்டீஸ் தேர்ந்தெடுக்கவும். இதில் ‘Hide inactive icons’ என்று உள்ள இடத்தில் எதிரே உள்ள கட்டத்தில் டிக் அடையாளம் ஏற்படுத்தவும். பொதுவாக இது சரியாகவே தன் வேலையை மேற்கொள்ளும். சில வேளைகளில் நமக்கு வேண்டிய ஐகான்களைக் கூட மறைத்து வைக்கும். அப்போது மீண்டும் இதே போல் சென்று புராபர்ட்டீஸ் மெனுவில் Customize பட்டனில் கிளிக் செய்திடவும். பின் உங்களுக்குத்தேவையான ஐகானைக் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும். பின் ‘Always Show’ என்பதைத் தேர்ந்தெடுத்து ஓகே கிளிக் செய்து வெளியேறினால் அந்த ஐகான் காட்டப்படும்.

11.என்ன ஸ்பெசிபிகேஷன்:
சில வேளைகளில் உங்கள் கம்ப்யூட்டர் வடிவமைப்பில் என்ன ஸ்பெசிபிகேஷன் என்று நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டியதிருக்கும். புராசசர் என்ன வகை? ராம் மெமரி எவ்வளவு? என்ற தகவல்களெல்லாம் தேவையாய் இருக்கும். இதனைப் பெற My Computer ஐகானில் ரைட் கிளிக் செய்திடவும். கிடைக்கும் மெனுவில் Properties செலக்ட் செய்திடுங்கள். கிடைக்கும் பாக்ஸின் கீழாக ‘Computer’ என்று ஒரு இடம் இருக்கும். அதில் புராசசர் என்ன, அதன் ஸ்பீட் என்ன,மெமரியின் இடம் என்ன என்ற விபரமெல்லாம் தரப்படும்.

12. கிராஷ் ஆன பின் போல்டர்களைக் காப்பாற்ற:
விண்டோஸ் எக்ஸ்பியில் நிறைய போல்டர்களைத் திறந்து வைத்து செயல்படும்போது ஒன்று கிராஷ் ஆனாலும் அனைத்தும் மூடப்படும். இதனை நாம் தவிர்க்கலாம். அதற்கான வழியை எக்ஸ்பி வைத்துள்ளது. கண்ட்ரோல் பேனலைத் திறந்து Folder Options என்னும் பிரிவினைத் தேர்ந்தெடுக்கவும். அதில் வியூ டேபிற்குச் செல்லவும். அதில் பல ஆப்ஷன்கள் தரப்பட்டிருக்கும். அவற்றில் ‘Launch folder windows in a separate process’ என்று ஒன்று இருக்கும். அதன் அருகே டிக் மார்க் அடையாளம் ஏற்படுத்தி பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.

0 எக்ஸெல் பங்சன்கள்

எக்ஸெல் பங்சன்கள்

எக்ஸெல் தொகுப்பில் பெரும்பாலான டேட்டாக்கள் எண்களாகவே உள்ளன. இவற்றைக் கொண்டு பல பொதுவான கணிப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே ஒவ்வொரு முறையும் இதற்கான பார்முலாக்களை அமைத்து செயல் படுத்தினால் நேரம் வீணாகும் என்பதற்காக எக்ஸெல் தொகுப்பில் டிபால்ட்டாக பல கணக்கீடு பங்சன்கள் தரப்பட்டுள்ளன. அவற்றில் நினைவில் கொள்ள வேண்டிய சில பங்சன்கள் குறித்த விளக்கங்கள் இங்கு தரப்படுகின்றன.

1. Average: கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள எண்களின் சராசரியைக் கணக்கிட்டு தருகிறது. இதனைப் பயன்படுத்தும் விதம்: AVERAGE (A:A4) இந்த பார்முலாவில் A1முதல் A4வரையிலான செல்களில் உள்ள எண்களின் சராசரி கணக்கிடப்பட்டு, அதாவது A1 முதல் A4 வரையிலான எண்கள் கூட்டப்பட்டு கூட்டுத் தொகை 4ஆல் வகுக்கப்பட்டு தரப்படும். இந்த பார்முலா எந்த செல்லுக்கென எழுதப் பட்டுள்ளதோ அந்த செல்லில் பதியப்படும்.

2. Count: கொடுக்கப்பட்டுள்ள செல்களில் எத்தனை செல்களில் மதிப்பு தரப்பட்டுள்ளது எனக் கணக்கிடப்பட்டு அந்த மதிப்பு பார்முலா தரப்பட்டுள்ள செல்லில் பதியப்படும். இதனை அமைக்கும் விதம் COUNT (A1:A4)

3.Max: கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள எண்களில் எது அதிக மதிப்புடையது என்று கண்டறிந்து சொல்லும். இதனைப் பயன்படுத்தும் விதம்: MAX(A1:A4) இந்த பார்முலாவில் A1 முதல் A4 வரையிலான செல்களில் உள்ள எண்களில் எது பெரிய எண் எனக் கண்டறிந்து அந்த மதிப்பு இந்த பார்முலா தரப்பட்டுள்ள செல்லில் பதியப்படும்.

4. Min: கொடுக்கப்பட்டுள்ள பட்டியலில் உள்ள எண்களில் எது குறைந்த மதிப்புடையது என்று கண்டறிந்து சொல்லும்.

இதனைப் பயன்படுத்தும் விதம்: Min (A1:A4) இந்த பார்முலாவில் A1முதல் A4 வரையிலான செல்களில் உள்ள எண்களில் எது குறைந்த மதிப்பு கொண்ட எண் எனக் கண்டறிந்து அந்த மதிப்பு இந்த பார்முலா தரப்பட்டுள்ள செல்லில் பதியப்படும்.

5 Sum: இந்த பங்சன் என்ன செய்கிறது? வரிசையாகத் தரப்படும் டேட்டாக்களைக் கூட்டுகிறது.

இதனைப் பயன்படுத்தும் விதம்: SUM (A1:A4) இந்த பார்முலாவில் A1 முதல் A4 வரையிலான செல்களில் உள்ள டேட்டாக்கள் கூட்டப் படுகின்றன.

இந்த பங்சனில் உள்ள பார்முலாவை எந்த செல்லில் அமைக்கிறீர்களோ அந்த செல்லில் இந்த கூட்டுத்தொகையின் மதிப்பு பதியப் படும். மேலே தரப்பட்டிருக்கும் எடுத்துக் காட்டுக்களில் செல்களின் எண்களாக நமக்குத் தேவைப் படும் செல்களின் எண்களைத் தரலாம்.

0 செட்டிங்ஸ் மாற்றாமல் இருக்க

செட்டிங்ஸ் மாற்றாமல் இருக்க

வீடுகளில் டெஸ்க்டாப் கம்ப்யூட்டர் ஒன்று இருப்பது வழக்கமாகிவிட்ட நிலையில் ஒரு கம்ப்யூட்டரை பலர் இயக்குவதும் தவிர்க்க முடியாததாகி விட்டது. இதில் ஒருவருக்கு கம்ப்யூட்டர் அத்தியாவசியத் தேவையாக இருக்கும். அவரே அதில் உள்ள செட்டிங்ஸ் மற்றும் புரோகிராம்களை அமைத்து இயக்கிவருவார். மற்றவர்கள் தங்கள் தேவைகளுக்கேற்ப கம்ப்யூட்டரைப் பயன்படுத்துவார்கள். இதில் பிரச்சினை என்னவென்றால் மற்றவர்கள் அவ்வாறு பயன்படுத்துகையில் தாங்கள் விரும்பும் சில மாற்றங்களை கம்ப்யூட்டரில் ஏற்படுத்திவிடுவார்கள். இது கம்ப்யூட்டரிலேயே தங்களின் பல வேலைகளை மேற்கொள்வோருக்கு எரிச்சல் தரும் நிலையை தோற்றுவிக்கும்.

எடுத்துக் காட்டாக வேர்டில் ரூலர் , நார்மல் டெம்ப்ளேட், எக்ஸெல் தொகுப்பில் தேதி அமைப்பு, பக்க அமைப்பு, பிரவுசர் செட்டிங்ஸ், இமெயில் செட்டிங்ஸ் ஆகியவை குறிப்பிட்ட அமைப்பில் வைத்து பழகியவர்களுக்கு திடீரென மாற்றங்கள் இருந்தால் அவற்றில் வேலை பார்ப்பது சிரமமாகிவிடும். எனவே மற்றவர்கள் கம்ப்யூட்டரில் செட்டிங்ஸை மாற்றுவதைத் தடை செய்திட வேண்டும் என எண்ணுவார்கள்.

குழந்தைகள் கம்ப்யூட்டரைப் பகிர்ந்து பயன்படுத்தும் இல்லங்களில் இது போன்ற சூழ்நிலைகள் அடிக்கடி ஏற்படும். தேவையற்ற புரோகிராம்களை இன்ஸ்டால் செய்து வைப்பதும், இன்டர்நெட்டில் செட்டிங்ஸை மாற்றி பயன்படுத்துவதும் குழந்தைகள் அடிக்கடி செய்யும் தவறுகளாகும்.

இது போன்ற பிரச்சினைகளில் இருந்து கம்ப்யூட்டரைப் பாதுகாக்கவும் அதன் மூலம் உங்களின் நலனைப் பாதுகாக்கவும் விண்டோஸ் Steadystate என்று ஒரு புரோகிராமினை இலவசமாகத் தருகிறது. இதை டவுண்லோட் செய்து இன்ஸ்டால் செய்துவிட்டால் உங்களைத் தவிர வேறு யாரும் செட்டிங்ஸ் மாற்ற முடியாது. இதை எப்படி அமைப்பது என இங்கு பார்க்கலாம்.

1. இந்த புரோகிராமின் பெயர் விண்டோஸ் ஸ்டெடி ஸ்டேட் (Windows Steadystate) இது கிடைக்கும் தள முகவரி: www.microsoft.com/windows/products/winfamily/sharedaccess இந்த தளம் சென்று புரோகிராமினை இறக்குவதற்குள் உங்கள் கம்ப்யூட்டரைத் தயார் செய்திட வேண்டும். அனைத்து டிஸ்க்குகளையும் முதலில் டிபிராக் செய்திடுங்கள். இதற்கு Start>>All Programs>> Accessories>>System Tools>>Disk Defrag menter எனச் செல்லவும். அனைத்து ஹார்ட் டிஸ்க்குகளையும் தேர்ந்தெடுத்து பின் டிபிராக்மெண்ட் பட்டனை அழுத்தவும். இதற்கு சிறிது நேரம் ஆனாலும் பொறுமையாக இந்த வேலையை மேற்கொள்ளவும். முடிந்தவுடன் மைக்ரோசாப்ட் அப்டேட் தளம் சென்று அண்மைக் காலத்தில் மைக்ரோசாப்ட் வழங்கிய அப்டேட் பைல்கள் உங்கள் கம்ப்யூட்டரில் பதியப்பட்டுவிட்டதா என்பதைச் சோதித்துப் பதியப்படாமல் இருந்தால் பதியவும். பின் நீங்கள் பயன்படுத்தும் ஆண்டி வைரஸ் தொகுப்பிற்கான தளம் சென்று அதனையும் அப்டேட் செய்திடவும். அத்துடன் உங்கள் கம்ப்யூட்டரின் அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் பாஸ்வேர்ட் மூலம் பாதுகாக்கப்பட்டிருப்பதனையும் உறுதி செய்து கொள்ளுங்கள். இதனை Control Panel>> User Accounts சென்று ஆப் ஷனில் உறுதி செய்யலாம்.

2. இனி விண்டோஸ் ஸ்டெடி ஸ்டேட் புரோகிராமினை இன்ஸ்டால் செய்து இயக்க வேண்டியதுதான். மேலே குறிப்பிட்ட மைக் ரோசாப்ட் தளம் சென்று அத்தளத்தில் உள்ள டவுண்லோட் பட்டனை அழுத்தவும். முதலில் உங்கள் கம்ப்யூட்டரில் உள்ள விண் டோஸ் எக்ஸ்பி காசு கொடுத்து வாங்கிய ஒரிஜினல் பதிப்பா என்ற சோதனை மேற்கொள் ளப்படும். இந்த வேலிடேஷன் சோதனை முடிந்தவுடன் டவுண்லோட் பட்டனை அழுத்தி புரோகிராமினை டவுண்லோட் செய் திடவும். இதை டெஸ்க் டாப்பில் சேவ் செய்திடவும். பின் இது டெஸ்க்டாப்பில் இருக்கும் இடம் அறிந்து SteadyState_Setup_ENU.exe என்ற பைலை டபுள் கிளிக் செய்திடவும். டயலாக் பாக்ஸ்களுக்கு யெஸ் கொடுத்து நெக்ஸ்ட் பட்டனை அழுத்தியவாறு தொடர்ந் தால் புரோகிராம் பதியப்பட்டுவிடும்.

3. அடுத்து இந்த புரோகிராமினை இயக்கவும். ஸ்டார்ட் – ஆல் புரோகிராம்ஸ் சென்று இயக்கலாம். அல்லது டெஸ்க்டாப்பில் இதன் ஐகானில் மீது கிளிக் செய்து இயக்கலாம். இந்த புரோகிராம் இயங்கத் தொடங்குகையில் உடனே ஹெல்ப் மெனு திறக்கப்படும். இதனை மூடவும். திரையின் வலது பக்கத்தில் கம்ப்யூட்டரில் உள்ள மற்ற யூசர் அக்கவுன்ட்ஸ் அனைத்தும் காட்டப்படும். அட்மினிஸ்ட்ரேட்டர் அக்கவுண்ட் காட்டப்பட மாட்டாது. உங்களுக்குத் தேவையான பிற யூசர் அக்கவுண்ட்கள் இல்லை என்றால் புதிய யூசர் அக்கவுண்ட்களை உருவாக்கலாம். இதற்கு ‘Add a New user’ என்ற லிங்க் கில் கிளிக் செய்து பெயர் மற்றும் பாஸ்வேர்ட் கொடுத்து ஓகே கிளிக் செய்தால் யூசர் அக்கவுண்ட் தொடங்கப்படும்.

4. இதில் உள்ள ஜெனரல் டேப்பினைப் பயன்படுத்தி யூசர் ஒருவர் தன் அக்கவுண்ட்டிற்கு நிரந்தர மாற்றங்களை ஏற்படுத்துவதைத் தடுக்கலாம். இதில் ஒரு யூசர் எவ்வளவு நேரம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தலாம் என்பதையும் செட் செய்திட முடியும்.

5. அடுத்து Windows Restrictions என்ற டேப்பைத் தேர்ந்தெடுக்கவும். இதன் மூலம் கம்ப்யூட்டரைப் பயன்படுத்துபவர்கள் விண்டோஸ் இயக்கத்தின் குறிப்பிட்ட சில வசதிகளைப் பயன்படுத்துவதைத் தடுத்து அமைக்கலாம். இதில் High, Medium, Low மற்றும் No Restrictions என நான்கு வகையான தடுப்பு நிலைகள் உள்ளன. நீங்கள் அமைக்கவிரும்பும் வகையில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம். இங்கு காணப்படும் பட்டியலில் விண் டோஸ் வசதிகள் அனைத்தும் காணப்படும். ஒரு குறிப்பிட்ட யூசரைக் கண்ட்ரோல் பேனல் பக்கம் செல்ல முடியாதபடி கூட அமைக்கலாம்.

6. இந்த பட்டியலில் இன்னும் கீழாக ஸ்குரோல் செய்து போனால் இன்னும் பல வகையான தடுப்பு ஆப்ஷன்களைக் காணலாம். ரெஜிஸ்ட்ரி எடிட்டர் அணுக முடியாமல் தடுத்தல், சிடிக்கள் தானாக இயங்கும் ஆட்டோ பிளேயைத் தடுத்தல்,சிடி மற்றும் டிவிடிக்களை உருவாக்குவதைத் தடுத்தல் போன்ற பல வழிகள் காட்டப்படும். இறுதியில் அனைத்து ஹார்ட் டிஸ்க்குகளும் மற்றும் இணைத்து எடுக்கக் கூடிய டிஸ்க்குகளும் பட்டியலிடப்படும். இதன் எதிரே உள்ள பாக்ஸ்களில் டிக் செய்தால் அந்த ஹார்ட் டிஸ்க் மறைக்கப்பட்டுவிடும்.

7. அடுத்ததாக Feature Restrictions டேப் செல்லலாம். இதில் இன்டர்நெட் எக்ஸ்புளோரர் மற்றும் மைக்ரோசாப்ட் ஆபீஸ் தொகுப்புகளில் குறிப்பிட்ட அளவில் தடை ஏற்படுத்தலாம். இன்டர்நெட் பயன்பாட்டினையே தடை செய்யலாம். அல்லது குறிப்பிட்ட தளங்களுக்கு மட்டும் செல்லும் வகையில் செட்டிங்ஸை அமைக்கலாம்.

8. எம்.எஸ். ஆபீஸ் தொகுப்பினைப் பொறுத்தவரை விசுவல் பேசிக் புரோகிராமினை செயல் இழக்கச் செய்துவிட்டால் இதில் வைரஸ் பாதிக்கும் வழிகளை அடைத்துவிடலாம். அதே போல Addin மெனுவைத் தடுத்து விட்டால் கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் ஏற்கனவே இருக்கின்ற ஆட்–இன் வசதிகளை நீக்க முடியாது. புதிதாக எதனையும் சேர்க்கவும் முடியாது.

9. அடுத்து Blocked Programs என்ற டேப் செல்லலாம். இதில் கிளிக் செய்தால் இடது பக்கம் உங்கள் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்துள்ள அனைத்து புரோகிராம்களின் பட்டியல் கிடைக்கும். தடை செய்யப்பட வேண்டிய புரோகிராம்களுக்கு எதிரே டிக் செய்தால் அவை வலது புறம் மாறிவிடும். அனைத்து புரோகிராம்களையும் தடை செய்திட வேண்டும் என்றால் Block All என்பதில் கிளிக் செய்திடலாம். இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம் பட்டியலில் இல்லை என்றால் பிரவுஸ் செய்து அந்த புரோகிராமினைத் தேர்ந்தெடுத்து தடுத்துவிடலாம்.

10. பிற யூசர்களுக்கு உண்டான தடையை செட் செய்துவிட்டால் இந்த அமைப்பை சேவ் செய்து கொள்ளலாம். பின் ஒரு நாளில் விண்டோஸ் தொகுப்பை ரீ இன்ஸ்டால் செய்திட வேண்டும் என்றால் மீண்டும் ஒருமுறை இந்தத் தடைகளுக்கான செட்டிங்ஸ் ஏற்படுத்தும் வேலையை மேற்கொள்ளாமல் அப்படியே மீண்டும் ஒரே கிளிக்கில் அமைத்துவிடலாம். இதற்கு இந்த திரையில் கீழ் வலது மூலையில் உள்ள Export User என்ற லிங்க்கில் கிளிக் செய்து இந்த பேக் அப் எங்கு இருக்க வேண்டுமோ அந்த போல்டர் செல்ல வேண்டும். பின் யூசர் நேம் மெனுவில் எந்த யூசருக்கான தடைகளோ அதையும் தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பின் Save கிளிக் செய்து வெளியேற வேண்டும். இப்படியே ஒவ்வொரு யூசருக்கும் தடைகளை செட் செய்து சேவ் செய்திடலாம்.

11. தனிப்பட்ட யூசர் அக்கவுண்ட்டில் தடை விதிப்பது மட்டுமின்றி சிலவற்றை வேறு எவரும் பயன்படுத்த முடியாதபடியும் தடை செய்திடலாம். இதற்கு மெயின் செக்ஷனில் உள்ள Global Computer Settings பயன்படுத்த வேண்டும். அதில் Set Computer Restrictions என்ற லிங்க்கைக் கிளிக் செய்திட வேண்டும். விண்டோஸ் தொடங்குகையில் யூசர் அக்கவுண்ட்ஸ் திரை தோன்றுவதையும் மறைக்கலாம். இதற்கு ‘Turn on the Welcome Screen’ என்பதன் எதிரே உள்ள டிக் அடையாளத்தை எடுத்துவிடலாம்.

12. பெரும்பாலான தடைகள் எல்லாமே நேரடியாக புரோகிராம்கள் மற்றும் சில வசதிகளைப் பயன்படுத்துவதைத் தடை செய்திடும் வகையில் அமைக்கப்படுகின்றன. ஒரு சில குறுக்கே புகுந்து தடுக்கும் வகையிலும் அமைகின்றன. எம்.எஸ்.ஆபீஸ் டாகுமெண்ட்கள் சிலவற்றை மற்ற யூசர்கள் பார்க்க முடியாதபடி தடை அமைத்திருப்போம். ஆனால் இவற்றை இன்டர்நெட் எக்ஸ்புளோரரில் திறக்க முயற்சிக்கையில் தடைகள் ஒதுக்கப்பட்டு டாகுமெண்ட்கள் திறக்கப்படும். எனவே இந்த வகை முயற்சிகளுக்கும் தடை விதிக்க ஸ்டெடி ஸ்டேட் இடம் தருகிறது. இதற்கென ‘Prevent users from opening Microsoft Office Documents from within Internet Explorer’ என்று ஒரு ஆப்ஷன் உள்ளது. இதனை இயக்கி செட் செய்தால் நாம் மறைத்திடும் டாகுமெண்ட்களுக்கு முழுமையான பாதுகாப்பு கிடைத்திடும்.

13. அப்டேட் பைல்கள் விண்டோஸ் சிஸ்டம் இயங்க மிக மிக முக்கியமானவையாகும். இவற்றை அவ்வப்போது தானாக சிஸ்டம் அப்டேட் செய்திடும் வகையில் அமைத்திட வேண்டும். இந்த வசதியினையும் ஸ்டெடி ஸ்டேட் தருகிறது. இதனுடைய மெயின் பேஜில் Schedule Software Update என்று இருப்பதில் கிளிக் செய்திடவும். பின் அதில் ‘Use Windows Steadystate to automatically download and instal updates’ என்று இருப்பதில் கிளிக் செய்து இயக்கவும். அங்கேயே இருக்கும் மெனுவில் எத்தனை நாட்களுக்கு ஒருமுறை விண்டோஸ் இந்த அப்டேட் பைல்களை செக் செய்து அப்டேட் செய்திட வேண்டும் என்பதனையும் செட் செய்திடலாம். இதே போல அப்டேட் தேவைப்படும் மற்ற செக்யுரிட்டி புரோகிராம்களுக்கும், ஆண்டி வைரஸ் போல, இதே போல் நாட்களை செட் செய்திடலாம்.

14. விண்டோஸ் ஸ்டெடி ஸ்டேட் புரோகிராமில் மிக மிக முக்கியமானது டிஸ்க் பாதுகாப்புதான். மெயின் ஸ்கிரீனில் உள்ள ‘Protect the Hard Disk’ என்பதில் கிளிக் செய்து இதனை மேற்கொள்ளலாம். ஆனால் இதனைக் கவனமாகக் கையாள வேண்டும். முழுமையாக ஒரு டிஸ்க்கை பாதுகாக்க அமைத்துவிட்டால் மை டாகுமெண்ட்ஸ் போல்டரில் எதுவும் சேவ் செய்திட முடியாது. எனவே அதற்கான வழிகளை நன்கு யோசித்த பின்னரே இந்த ஆப்ஷனைத் தேர்ந்தெடுத்து அமைக்க வேண்டும்.

நம் கம்ப்யூட்டரை மற்றவர்களிடமிருந்து காப்பாற்ற மைக்ரோசாப்ட் தரும் அருமையான புரோகிராம் விண்டோஸ் ஸ்டெடி ஸ்டேட். இலவசமாகக் கிடைக்கும் இந்த புரோகிராமினை நம் பாதுகாப்பிற்கு பயன்படுத்துவது நல்லது. மேலே சொல்லப்பட்டிருப்பது மட்டுமின்றி இன்னும் பல பாதுகாப்பு வழிகளையும் இந்த புரோகிராம் தருகிறது. பயன்படுத்துகையில் ஒருவர் இதனை நன்கு அறிந்து கொண்டு தொடர்ந்து பயன்படுத்தலாம்.

0 சிஸ்டம் குறித்த தகவல்களை அறிய

உங்கள் கம்ப்யூட்டர் சிஸ்டத்தில் இயங்கும் அனைத்து சாதனங்களின் திறன் குறித்து அறிய உங்களுக்கு ஆவலாக உள்ளதா! அதற்கான புரோகிராம் டவுண்லோட் தான் SIW என்பதாகும். இது System Information for Windows என்பதைக் குறிக்கிறது. சிஸ்டம் சாப்ட்வேர், நெட்வொர்க் மற்றும் பிற ஹார்ட் வேர் சாதனங்களின் திறன் குறித்து தெளிவாக எடுத்துரைக்கிறது. சிபியு கிளாக் செயல் வேகம், ராம் மெமரியின் அலைவேகம், பயாஸ், மற்றும் விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தின் பதிப்பு, பேட்ச் பைல் இணைப்பு,லைசன்ஸ் குறித்த தகவல் என அனைத்து தகவல்களும் தரப்படுகின்றன. இவற்றுடன் கம்ப்யூட்டரில் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்கள் குறித்த தகவல்களும் கிடைக்கின்றன.

இந்த புரோகிராமில் சென்சார் ஒன்று தரப்படுகிறது. இது ஒவ்வொரு சாதனப் பகுதியின் வெப்ப தன்மை குறித்து அறிவிக்கிறது. பாஸ்வேர்ட் மறந்து போனால் எடுத்துத் தரும் வசதியும் இதில் உண்டு. இது செயல்பட குறைந்த அளவில் மெமரியை எடுத்துக் கொள்கிறது. சில நொடிகளில் அனைத்து தகவல்களையும் பெற்றுத் தருகிறது.

இந்த அடிப்படை புரோகிராமினை இலவசமாக டவுண்லோட் செய்திடலாம். சில சிறப்பு வசதிகளுடன் கட்டணம் செலுத்திப் பெறும் பதிப்புகளும் உண்டு. இலவச புரோகிராமினைப் பெற http://www.techspot.com/downloads/155siwsysteminfo.html என்ற முகவரியில் உள்ள தளத்தை அணுகவும். விண்டோஸ் சிஸ்டத்தில் பதிந்து இயக்கப் படக் கூடிய புரோகிராம் ஒன்றும், தனியாகவே இயக்கக் கூடிய புரோகிராம் ஒன்றும் கிடைக்கிறது. எனவே அதனை ஒரு பிளாஷ் டிரைவில் பதிந்து இயக்கலாம்.

0 அன்லாக்கர்

பலமுறை நாம் ஏதேனும் பைல்களை அழிக்க முற்படுகையில் சில எரிச்சலூட்டும் செய்திகள் காட்டப்பட்டு நம் முயற்சியில் குறுக்கே நிற்கும். அந்த செய்திகள் பின்வருமாறு இருக்கலாம்:–

இன்னொரு புரோகிராம் இந்த பைலை பயன்படுத்திக் கொண்டுள்ளது.

பைலைப் பகிர்ந்து கொள்வதில் வரையறை மீறப்பட்டுள்ளது. இன்னொரு புரோகிராம் அல்லது இன்னொரு யூசர் இதனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார். டிஸ்க் முழுமையாக இல்லை அல்லது எழுதப்படவிடாமல் பாதுகாக்கப்பட்டுள்ளது. பைல் இப்போது பயன்பாட்டில் இல்லை.

சோர்ஸ் அல்லது டெஸ்டினேஷன் பைல் ஒருவேளை பயன்பாட்டில் இல்லை.

இதில் என்ன சோகம் என்றால் இன்னொரு புரோகிராம் பயன்படுத்துவதாக செய்தி வருகையில் நாம் கம்ப்யூட்டரில் வேறு எந்த புரோகிராமினையும் பயன்படுத்தாமல் இருப்போம். என்ன புதிராக உள்ளதே என்று அங்கலாய்த்துக் கொண்டிருப்போம். இன்னொரு யூசர் எங்கே இருக்கிறார்? இது யாரைக் குறிக்கிறது என்று வியப்பில் இருப்போம். இதெல்லாம் கம்ப்யூட்டரில் சில செட் அப் அமைப்பின் காரணமாக நமக்கு வரும் செய்திகள். பொதுவாக இது போன் ற செய்திகள் வருகையில் பைலை அழிக்கும் வேலையையே விட்டுவிடுவோம்; அல்லது ரீஸ்டார்ட் செய்து பைலை அழிப்போம்.

இந்த வேலை இல்லாமல், கம்ப்யூட்டரை ரீஸ்டார்ட் செய்திடாமல் பைலை அழிக்க இலவசமாக ஒரு புரோகிராம் இணையத்தில் கிடைக்கிறது. அதன் பெயர் (Unlocker)அன்லாக்கர். இதனை http://ccollomb.free.fr/unlocker/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து பெறலாம். இதனை எளிதாக டவுண்லோட் செய்து பின் இன்ஸ்டால் செய்திடலாம்.

இன்ஸ்டால் செய்த பின் நீங்கள் அழிக்க விரும்பும் பைல் அல்லது போல்டரில் ரைட் கிளிக் செய்திடுங்கள்.

கிடைக்கும் மெனுவில் Unlocker என்ற ஆப்ஷனில் கிளிக் செய்திடுங்கள். நீங்கள் இலக்கு வைக்கும் பைல் மேலே சொல்லப்பட்ட காரணங்களால் லாக் செய்யப்பட்டிருந்தால் ஒரு சிறிய விண்டோ ஒன்று திறக்கப்படும்.

அதில் எந்த புரோகிராமினால் அல்லது யூசரால் எதற்காக லாக் செய்யப்பட்டுள்ளது என்ற தகவல் கிடைக்கும்.

உடனே மிக எளிதாக “ Unlock All ” என்ற பட்டனைக் கிளிக் செய்திடவும். பைல் இப்போது விடுவிக்கப்பட்டு டெலீட் செய்திட ஏதுவாக இருக்கும். நீங்கள் அதனை அழித்துவிடலாம்.

0 கவனிக்கலாமா கீ போர்டை!

தினந்தோறும் தான் கீ போர்டை நாம் கவனித்துப் பயன்படுத்தி வருகிறோம். இதில் என்ன புதுமையாகக் கவனிக்கப் போகிறோம் என்று எண்ணுகிறீர்களா. பல புரோகிராம்களை நம் இஷ்டப்படி செட் செய்கிறோம். எம்.எஸ். ஆபீஸ், இணைய பிரவுசர்கள் என எதனை எடுத்தாலும் ஷார்ட் கட் கீகள் கொடுத்து நம் விருப்பத்திற்கேற்றபடி ட்யூன் செய்கிறோம். ஆனால் கீ போர்டை ஏதாவது செய்து, நமக்கு வசதியாக மாற்ற வழிகள் உள்ளனவா என்ற சிந்தனை நமக்கு ஏற்படுவதில்லை. ஆனாலும் கீ போர்டையும் நமக்கு ஏற்றபடி சற்று மாற்றி அமைத்து செட் செய்திட முடியும். அவற்றை இங்கு காணலாம். விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்திலேயே இதற்கான பல வழிகள் தரப்பட்டுள்ளன. ஒவ்வொன்றாக அவற்றைக் காணலாம்.

முதலில் Start கீ அழுத்தி பின் கிடைக்கும் மெனுவில் தேர்ந்தெடுத்து Control Panel செல்லவும். அதன்பின் கிடைக்கும் விண்டோவில் சிஸ்டம் சார்ந்த பல பிரிவுகள் கிடைக்கும். உங்கள் ஆப்பரேட்டிங் சிஸ்டம் விண்டோஸ் எக்ஸ்பிக்கு முந்தையதாக இருந்தால் Printers and Other Hardware என்னும் ஐகானிலும் விண்டோஸ் எக்ஸ்பியாக இருந்தால் Keyboard என்னும் ஐகானிலும் கிளிக் செய்திடவும். உடன் Keyboard Properties என்னும் விண்டோ கிடைக்கும். இதில் Speed என்னும் டேபை அழுத்த கிடைக்கும் பிரிவுகளில் Character Repeat என்ற பிரிவினைக் காணவும். இதில் கொடுத்துள்ள நீள அளவைக் கோட்டில் Slow மற்றும் Fast என இரண்டு அளவுகள் கொடுக்கப்பட்டிருக்கும். இதில் ஒரு கீயைத் தொடர்ந்து அழுத்துகையில் அந்த கீக்கான எழுத்து எவ்வளவு வேகமாக அல்லது மெதுவாக திரையில் அமைக்கப்படவேண்டும் என்பதனைத் தேர்ந்தெடுக்கலாம். குடூணிதீ என்பதனை நோக்கி அதில் உள்ள அளவுக் கோட்டினை இழுத்து அமைத்த பின் கீழே தரப்பட்டிருக்கும் நீள செவ்வகக் கட்டத்தில் எவ்வளவு மெதுவாக என்பதை ஒரு கீயை அழுத்திப் பார்த்து சோதனை செய்து கொள்ளலாம். பின் Slow மற்றும் ஓகே அழுத்தி வெளியேறலாம்.

இதன் பின் ஒரு கீயைத் தொடர்ந்து அழுத்தினால் அதற்கான எழுத்துக்கள் மெதுவாக டெக்ஸ்ட்டில் அமையும். ஆனால் ஒரு கீயை அழுத்துகையில் மட்டுமல்ல, தொடர்ந்து வேகமாக இதுவரை டெக்ஸ்ட் டைப் செய்து பழக்கப்பட்டவர்கள் இப்போது சிறிது மெதுவாக டெக்ஸ்ட் டைப் ஆவதை உணர்வீர்கள். மேலும் ஒரு வரியை வேகமாக அழிக்க வேண்டும் என எண்ணி பேக் ஸ்பேஸை அழுத்த்த்துவீர்கள்; ஆனால் உங்கள் வேகத்திற்கு இடம் கொடுக்காமல் மேலே சொன்னபடி மெதுவாகவே அழிக்கப்படும். அப்போது ஏண்டா இதனை மெதுவாக அமைத்தோம் என வருத்தப்படுவீர்கள்.

இதே அமைப்பில் இன்னொரு விஷயத்தையும் மேற்கொள்ளலாம். கம்ப்யூட்டரில் செயலாற்றுகையில் செயலின் இதயத் துடிப்பைப் போல மின்னி மின்னி நமக்கு போக்கு காட்டுவது கர்சரின் துடிப்பே. இந்த துடிப்பினையும் வேகமாக இருக்கவேண்டுமா அல்லது மெதுவாக இருக்க வேண்டுமா என்பதனையும் இதே விண்டோவில் மேற்கொள்ளலாம். None / Fast என்ற இரு அளவுகளில் ஏதேனும் ஒரு நிலையில் அளவு கோட்டினை அமைக்கலாம். கர்சர் எப்படி துடிக்கும் என்பதனை அருகில் காட்டப்படும் கர்சர் துடிப்பதனைக் கொண்டு உணரலாம். நாம் விரும்பும்படி இதனையும் அமைத்துவிட்டு அப்ளை மற்றும் ஓகே கிளிக் செய்து வெளியே வரலாம்.
கீ போர்டு அது அமரும் இடத்துடன் பதிந்து அமர்ந்து இருப்பது நம் விரல்களின் இயக்கத்தை அதன் போக்கில் விடாமல், கஷ்டப்படுத்துவதாக இருக்கலாம். அதற்குப் பதிலாக அது சற்று உயர்ந்திருந்தால் நமக்கு வசதியாக இருக்கும். இதற்காகவே கீ போர்டின் பின்புறம் மேலாக இரு கிளிப்கள் தரப்பட்டிருக்கும். இதனை எடுத்து நீட்டி, உயர்த்தி வைக்கலாம். சற்று உயர்ந்த நிலையில் டைப் செய்வது எளிதாக இருக்கும்.

0 எம்.எஸ்.பெயிண்ட் புரோகிராம்


மைக்ரோசாப்ட் விண்டோஸ் தொகுப்புடன் இணைந்து தரப்படும் எம்.எஸ்.பெயிண்ட் புரோகிராம் சிறுவர்களும் பெரியவர்களும் மகிழ்ச்சியாகப் பயன்படுத்தும் புரோகிராம் ஆகும். நம் இஷ்டப்படி, கற்பனைப்படி பெயிண்டிங், படங்களை எடிட் செய்தல் என படம் சம்பந்தமான அனைத்து வேலைகளையும் இதில் மனதிற்கு திருப்தி ஏற்படும் வகையில் மேற்கொள்ளலாம். புதிதாய் இதனைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்கு இந்த குறிப்புகள் தரப்படுகின்றன. எம்.எஸ்.பெயிண்ட் என்பது இலவசமாகத் தரப்படும் கிராபிக்ஸ் புரோகிராம் ஆகும். படங்களை எடிட் செய்திட, அளவை மாற்றிட, பெரிதாக்கிப் பார்க்க, படத்தில் டெக்ஸ்ட் அமைக்க, சிறிய சிறிய அளவுகளில் விரும்பும் உருவத்தை அமைக்க, அமைத்த உருவங்களில் வண்ணத்தைப் பூசிப் பார்த்து மகிழ என படம் சம்பந்தமான எத்தனையோ வேலைகளை இதில் மேற்கொள்ளலாம். படங்களின் பார்மட்டுகளை இதன் மூலம் மாற்றவும் முடியும். இதனை இயக்க Start menu >> All Programs > Accessories > Paint எனச் செல்லவும். பெயிண்ட் புரோகிராம் திறக்கப்பட்டவுடன் மேலாகவும் இடது புறமாகவும் மற்றும் கீழாகவும் பல டூல் பார்கள் இருப்பதனைக் காணலாம். இவை எல்லாம் படங்களைக் கையாள நாம் பயன்படுத்தலாம். இவற்றை உங்களால் பார்க்க முடியவில்லை என்றால் View மெனு சென்று Tool Box, Color Box மற்றும் Status Bar அனைத்தும் டிக் செய்யப்பட்டிருக்கிறதான் எனப்பார்க்கவும். இல்லை என்றால் டிக் அடையாளத்தை ஏற்படுத்தவும். அனைத்து டூல் பார்களும் உங்களுக்குக் கிடைக்கும். இந்த டூல் பார்கள் எதற்கு என்று தெரியவேண்டும் என்றால் அந்த ஐகானில் மவுஸின் கர்சரை சிறிது நேரம் வைத்தால் அதன் வேலை என்ன என்று காட்டப்படும்.

அடுத்து ஒரு புதிய படம் ஒன்றை எப்படி வரைவது எனப் பார்ப்போம். File > New என்பதைக் கிளிக் செய்திடவும். படம் வரைவதற்கான கேன்வாஸ் அகலம் நீளம் உங்களுக்கு போதாது என்று எண்ணுகிறீர்களா? Image > Attributes செல்லவும். இதில் உங்கள் கேன்வாஸின் அளவை நீட்டிக்கலாம்; சுருக்கலாம். கீழேயிருக்கும் கலர் பாக்ஸில் ஏதேனும் ஒரு கலரைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். இனி நீங்கள் படம் ஒன்றை வரையலாம். இடது பக்கம் இருக்கும் டூல் பாக்ஸ் உங்களுக்கு படம் வரைய அனைத்து வகைகளிலும் உதவும். எடுத்துக் காட்டாக உங்கள் படத்தில் சிறிய செவ்வகக் கட்டம் வேண்டுமா?

Rectangle tool என்னும் டூலைத் தேர்ந்தெடுத்து கேன்வாஸில் மவுஸால் இழுத்தால் ஒரு செவ்வகக் கட்டம் கிடைக்கும். இது நீங்கள் ஏற்கனவே தேர்ந்தெடுத்த கலரில் கிடைக்கும். இனி இன்னொரு வண்ணத்தைத் தேர்ந்தெடுத்து பின் Fill With Colour பட்டனைத் தேர்ந்தெடுங்கள். இனி நீங்கள் ஏற்கனவே வரைந்த கட்டத்தில் எங்கு வேண்டுமானாலும் மவுஸால் கிளிக் செய்திடுங்கள். தேர்ந்தெடுத்த வண்ணத்தால் கட்டம் நிறைவடையும். இதே போல இடது பக்கம் உள்ள டூல் பாக்ஸில் கிடைக்கும் கோடு, வளை கோடு, வளைவு உள்ள செவ்வகம் என அனைத்து டூல்களையும் பரிசோதித்து பார்த்து தேவையான சாதனத்தைப் பயன்படுத்தி படம் வரையுங்கள். தவறாக ஏதேனும் செய்துவிட்டால் எரேசர் என்னும் அழி ரப்பர் படத்தை ஒரு முறை கிளிக் செய்துவிட்டு நீக்க வேண்டியதை நீக்கி விடலாம். அப்படியா! என்று ஆச்சரியப்படாதீர்கள். செய்து பாருங்கள்.
படம் வரைந்தாயிற்றா! இந்த படத்தில் ஒரு குறிப்பிட்ட இடம் மட்டும் நன்றாக வந்திருக்கிறது என்று அபிப்பிராயப் படுகிறீர்களா! அதனை மட்டும் காப்பி செய்து இன்னொரு கேன்வாஸ் திறந்து ஒரு படமாக அமைக்கலாம்.
ஏற்கனவே உள்ள படத்தை எப்படி திருத்துவது? போட்டோக்கள், படங்கள் என ஏற்கனவே உருவான படங்களை இந்த புரோகிராமைப் பயன்படுத்தி திருத்தலாம். ஒருவரின் தலைமுடியை நரைத்த முடியாக மாற்றலாம். அவருக்கு கண்ணாடி மாட்டலாம். மீசை வைக்கலாம். இது போல வேடிக்கையான செயல்களையும் சீரியஸான செயல்களையும் இதில் மேற்கொள்ளலாம். ஏற்கனவே உள்ள பட பைலை இதில் திறக்க File > Open ன்ற மெனு மூலம் அந்த படம் உள்ள டைரக்டரி சென்று பட பைலின் பெயர் மீதுகிளிக் செய்து இங்கு திறக்கலாம். ஏற்கனவே உள்ள கேன்வாஸில் ஒரு படத்தை அமைக்க Edit > Paste From என்ற மெனு மூலம் மேற்கொள்ளலாம். படத்தின் அமைப்பை மாற்ற Image > Stretch/Skew என்பதைப் பயன்படுத்தலாம். Image மெனுவில் Flip/Rotate பயன்படுத்தி படங்களைச் சுழட்டலாம்.
உங்களின் விருப்பப்படி படத்தை அமைத்து விட்டீர்களா? சேவ் கட்டளை மூலம் படத்தை சேவ் செய்திடுங்கள். சேவ் செய்திடுகையில் படத்தை எந்த பார்மட்டில் சேவ் செய்திட வேண்டும் என்பதனை முடிவு செய்து அந்த பார்மட்டைத் (.BMP, .JPEG, அல்லது GIF) தேர்ந்தெடுத்து சேவ் செய்திடுங்கள். பின் இதனை பிரிண்ட் செய்திட வேண்டுமென்றால் வழக்கம்போல் பிரிண்ட் செய்திடலாம். அதற்கு முன் பிரிண்ட் பிரிவியூ மூலம் படம் எப்படி அச்சில் கிடைக்கும் என்பதனையும் பார்த்துக் கொள்ளலாம்.

0 கம்ப்யூட்டரில் ‘செக்’ போடுங்க கணக்கில் பணத்தை சேருங்க வந்திருச்சி லேட்டஸ்ட்

“செக்’ கையெழுத்து போட்டு, அதை வங்கிக்குச் சென்று நேரில் கொடுத்து பணம் எடுக்கும் வழக்கம் காணாமல் போய்விடும். ஆம். வீட்டிலிருந்தபடியே உங்கள் “செக்’கை கம்ப்யூட்டரில் அனுப்பினால், பணம் உங்கள் வங்கிக் கணக்கில் வந்துவிடும். நவீன தொழில்நுட்பம், காலத்தையும் இடத்தையும் சுருக்கும் புதிய ஆயுதமாக வடிவெடுத்துள்ளது. ஏற்கனவே கம்ப்யூட்டர் மற்றும் மொபைல் போன் மூலம் இருந்த இடத்தில் இருந்தபடியே வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வசதி வந்துள்ளது.
இந்நிலையில், அமெரிக்காவில், அமெரிக்க சேஸ் வங்கி மற்றும் சிட்டி வங்கி இரண்டும் புதுமையான ஒரு நடவடிக்கையை விரைவில் தொடங்க இருக்கின்றன. இதன்படி, நீங்கள் வீட்டிலிருந்தபடியே, உங்கள் “செக்’ கை அனுப்பி பணப் பரிமாற்றம் செய்து கொள்ளலாம். எப்படி? உங்கள் வீட்டு கம்ப்யூட்டரில் நீங்கள் கையெழுத்திட்ட, “செக்’கை ஸ்கேன் செய்து வங்கிக்கு அனுப்ப வேண்டும். வங்கியிலுள்ள கம்ப்யூட்டர் உங்கள் வங்கிக் கணக்கு, கையெழுத்து, தொகை, யாருக்கு அனுப்ப வேண்டும் என்று நீங்கள் குறிப்பிட்டிருக்கிறீர்களோ அவரது வங்கிக் கணக்கு இவற்றை நிமிடத்தில் சரி பார்த்து, உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து அவரது வங்கிக் கணக்குக்கு பணத்தை மாற்றிவிடும்.
இந்த நடைமுறை மூலம் நேரம் மிச்சமாகிறது. இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின், தொடர்ந்து அமெரிக்காவில் வங்கி நடைமுறைகள் குறிப்பாக, “செக்’ பரிமாற்றம் மிகவும் சிக்கலான நிலைக்கு உள்ளானது. அதில் மிகவும் தாமதம் ஏற்பட்டது. இதையடுத்து, 2003ல் அமெரிக்க செனட் சபையில், “செக்’ பரிமாற்றம் குறித்த விதியில் சில மாற்றங்கள் செய்து, “செக் 21′ என்ற சட்டம் கொண்டு வரப்பட்டது. அது, போட்டோ வடிவிலான “செக்’கை ஏற்றுக் கொள்ள வழி வகை செய்தது.
இதன் பிறகு, பல நிறுவனங்கள், ஸ்கேனிங் கருவிகளை நிறுவ ஆரம்பித்தன. இருந்தாலும் இந்த புதிய தொழில்நுட்பத்தை மொபைல் போனில் கொண்டு வருவதற்கு சில தடைகள் உள்ளன. குறிப்பாக கம்ப்யூட்டரில் பயன்படுத்தும் போது, நெட் திருடர்கள் லவட்டி விடுவார்களோ என்ற அச்சம் இருக்கிறது. அதேபோல், மொபைலிலும் நெட் திருடர்கள் தங்கள் கைவரிசையைக் காட்டி விட வாய்ப்புகள் இருப்பதால், அதைத் தடுக்க, புதிய பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து தொழில்நுட்ப வல்லுனர்கள் ஆய்வு செய்து கொண்டிருக்கின்றனர்.

0 வேர்ட் தொகுப்பில் உங்கள் டூல்பாரை உருவாக்க

வேர்ட் தொகுப்பில் நீங்களே உங்களுக்குத் தேவையான டூல்பாரினை உங்கள் வசதிப்படி உருவாக்கிக் கொள்ளலாம். இதற்கான வழிகளை வேர்ட் தொகுப்பு தன் பதிப்புகள் அனைத்திலும் வைத்துள்ளது. அவற்றை இங்கு காணலாம்.
1. டூல்ஸ் (Tools) மெனு சென்று கஸ்டமைஸ் (Customize) என்பதில் கிளிக் செய்து தேர்ந்தெடுக்கவும். இப்போது Customize டயலாக் பாக்ஸ் கிடைக்கும்.
2. இதில் டூல்பார்ஸ் என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும்.
3.இனி New என்பதில் கிளிக் செய்திடவும். நியூ டூல்பார் (New Toolbar) என்ற டயலாக் பாக்ஸ் இப்போது திறக்கப்படும்.
4. உங்கள் டூல்பாருக்கு ஏதேனும் பொருத்தமான பெயர் தரவும்.
5. இந்த டயலாக் பாக்ஸின் கீழாக, நீங்கள் அமைக்க இருக்கும் டூல்பார் எந்த டெம்ப்ளேட்டில் கிடைக்க வேண்டும் எனத் தேர்ந்தெடுத்து சுட்டிக் காட்டவேண்டும். Normal.dot என்ற டெம்ப்ளேட்டினைத் தேர்ந்தெடுத்தால், இந்த டூல்பார் அனைத்து வேர்ட் டாகுமெண்ட்களிலும் எல்லா நேரங்களிலும் கிடைக்கும்.
6. இனி நியூ டூல் பார் டயலாக் பாக்ஸை ஓகே கிளிக் செய்து மூடலாம். இப்போது கஸ்டமைஸ் டயலாக் பாக்ஸில், டூல்பார்ஸ் பட்டியலில் கடைசியாக இந்த டூல்பார் கிடைக்கும்.
7.கஸ்டமைஸ் டயலாக் பாக்ஸில் உள்ள Commands டேப்பில் அடுத்து கிளிக் செய்திடவும்.
8. பின் Categories பட்டியலில், புதிய டூல்பாருக்கு எந்த கட்டளையைத் தர விரும்புகிறீர்களோ, அந்த மேஜர் கேடகிரியைத் தேர்ந்தெடுக்கவும்.
9. கட்டளைப் பட்டியலில், எந்த கட்டளையை இணைக்க விரும்புகிறீர்களோ, அதனைத் தேர்ந்தெடுக்கவும்.
10.மவுஸைப் பயன்படுத்தி கமாண்ட்ஸ் லிஸ்ட்டில் இருந்து, குறிப்பிட்ட கட்டளையை இழுத்து வந்து உங்கள் டூல்பாரில் விடவும். மவுஸின் கர்சரை விட்டவுடன், சம்பந்தப்பட்ட ஐகான் அல்லது டூல்பாருக்கான சொல் அங்கு காட்டப்படும்.
11.இதே போல மேலும் டூல்பார்களை உருவாக்க மேலே 8 முதல் 10 வரை தரப்பட்டுள்ள செயல்பாடுகளை மேற்கொள்ளவும்.
12. இறுதியாக கஸ்டமைஸ் டயலாக் பாக்ஸை மூட குளோஸ் பட்டனில் கிளிக் செய்திடவும்.

0 கம்ப்யூட்டருக்கு புதியவரா நீங்கள்!

பைல்களை உருவாக்கிப் பாதுகாப்பது எப்படி?

கம்ப்யூட்டரை இப்போதுதான் பயன்படுத்தத் தொடங்கி உள்ளீர்களா? அப்படியானால் நீங்கள் முதலில் கற்றுக் கொள்ள வேண்டியது அதில் எப்படி பைல்களை உருவாக்கி, சேவ் செய்வது என்பதுதான்.

கம்ப்யூட்டரில் பதிந்து வைக்கப்படும் ஒவ்வொன்றும், அது டாகுமெண்ட் எனப்படும் ஆவணம், படம், பாட்டு, விளையாட்டு இப்படி எதுவாக இருந்தாலும், அது ஒரு பைலாக சேமிக்கப்பட்டு பதியப்படுகிறது. ஒரு குறிப்பிட்ட பைலை அதற்கான புரோகிராம் தான் திறந்து காட்ட முடியும். எடுத்துக் காட்டாக டாகுமெண்ட் பைல் ஒன்றை படத்திற்கான கிராபிக்ஸ் புரோகிராம் திறந்து படிக்க இயலாது. மியூசிக் புரோகிராம் ஒன்றினால் டாகுமெண்ட் பைல் ஒன்றைத் திறந்து பார்க்க முடியாது. ஒவ்வொரு புரோகிராமிற்கும் அது எந்த பைலைத் திறந்து இயக்க முடியும் என்பது புரோகிராமிங் செய்யப்பட்டு அறிந்து கொள்ளும் வகையில் காட்டப்பட்டிருக்கும். அதாவது ஒவ்வொரு பைலும் குறிப்பிட்ட பைல் டைப் வகையினைச் சேர்ந்தது என்பதனை அறிந்து கொள்ளலாம். இதனை அறியும் இடம் அந்த பைலின் பெயரை அடுத்து உள்ள முற்றுப் புள்ளியைக் கடந்து எழுதப்படும் எண்கள் அல்லது எழுத்துக்களைக் கொண்ட இடம் தான். எடுத்துக் காட்டாக ‘myletter.doc’ ’என்பது ஒரு பைலின் பெயர். இதில் முதலில் உள்ள myletter என்பது பைலின் பெயர்; doc என்பது அந்த பைல் எத்தகையது என்பதனைக் கூறும் பெயர். இதன் பொருள் என்னவென்றால் இந்த பைலைத் திறக்க doc என்பதைப் புரிந்து கொள்ளும் மைக்ரோசாப்ட் வேர்ட் போன்ற புரோகிராம் வேண்டும் என்பதே. புரோகிராம் என்று எடுத்துக் கொண்டால் அதில் பல வகையான பைல்கள் அடங்கியிருக்கலாம். இன்றையக் கம்ப்யூட்டர்களில் ஆயிரக்கணக்கான பைல்கள் கம்ப்யூட்டரின் ஹார்ட் டிஸ்க்கில் பல இடங்களில் பரவி பதியப்பட்டுக் கிடக்கின்றன. இவ்வாறு பரவிக் கிடக்கும் பைல்களை ஒழுங்குபடுத்த போல்டர்கள் (Folders) உதவுகின்றன. எனவே புரோகிராம் ஒன்றின் அனைத்து பைல்களும் ஒரு போல்டரில் இருந்தால் அவற்றை அடையாளம் காண்பது எளிது. போல்டர் ஒன்றின் உள்ளே மேலும் பைல்கள் அடங்கிய துணை போல்டர்கள் (‘subfolders’) இருக்கலாம். எடுத்துக் காட்டாக உங்கள் நிறுவனம் அல்லது அலுவலகம் சார்ந்த பைல்களை Office என்னும் போல்டரில் வைத்திருக்கலாம். இதன் உள்ளே அலுவலர்கள், ஊதியம், போனஸ் என்பது போன்ற பல துணை போல்டர்கள் இருக்கலாம். போல்டர் ஒன்றை நீங்களே உருவாக்கலாம்; குறிப்பிட்ட போல்டர்களை எளிதாகக் கண்டறிய ஷார்ட் கட் வழிகளையும் நீங்களே உருவாக்கலாம். இதற்கு எடுத்துக் காட்டாக ஒன்றைப் பார்க்கலாம். உங்கள் டெஸ்க் டாப்பில் (My Documents) என்ற ஷார்ட்கட் உடன் கூடிய ஐகான் இருக்கும். இதன் மீது மவுஸைக் கொண்டு இருமுறை கிளிக் செய்தால் My Documents என்னும் போல்டரில் உள்ள மற்ற போல்டர்களையும் பைல்களையும் காணலாம். My Documents என்பது உங்களுக்காகத் தானாக உருவாக்கப்பட்ட பெரிய போல்டராகும். நீங்கள் உருவாக்கும் அனைத்து பைல்களையும் பிரித்து பல குழுக்களாக வைத்திட மை டாகுமெண்ட்ஸ் உதவுகிறது. எடுத்துக் காட்டாக மை டாகுமெண்ட்ஸ் போல்டரிலேயே மைமியூசிக், மை பிக்சர்ஸ், மை வீடியோஸ் போன்ற சப் போல்டர்கள் நம் தேவைக்காகவே உள்ளன. ஆனால் நாம் உருவாக்கும் பைல்களைக் கட்டாயம் இதில் தான் சேமித்து வைக்க வேண்டியதில்லை. எந்த போல்டரில் வேண்டுமானாலும் போட்டு வைக்கலாம். பைல்களை எளிதில் பின்னர் தேடும் வகையில் போல்டர்களை உருவாக்கி அவற்றை எளிதாக அடையாளம் காணும் வகையில் பெயர் கொடுத்து வைக்கலாம். அதே போல தேவையற்ற போல்டர்களை அழித்துவிடவும் வேண்டும். இல்லை எனில் பைல்களே இல்லாத போல்டர்கள் இடத்தை அடைத்துக் கொண்டு இருக்கும்.

பைல்களைத் தேடும் வழிகள்: கம்ப்யூட்டரில் பைல்களைப் பல வழிகளில் தேடலாம். பலர் தங்கள் பைல்கள் எங்கிருக்கின்றன என அறியவும் அவற்றைத் திறக்கவும் மை கம்ப்யூட்டர் ஐகானைப் பயன்படுத்துகின்றனர். டெஸ்க் டாப்பில் இந்த ஐகான் மீது கிளிக் செய்தால் பைல்கள் பாதுகாத்து பதியப்பட்டு இருக்கும் பல்வேறு இடங்கள் காட்டப்படும். இதில் ‘C’ டிரைவ் மீது கிளிக் செய்தால் உங்கள் ஹார்ட் டிஸ்க்கில் உள்ள அனைத்து பைல்களும் அல்லது அவை இருக்கும் போல்டர்களும் காட்டப்படும். வேறு எக்ஸ்ட்ரா டிரைவ் இல்லை என்றால் இதில் மட்டுமே பைல்களும் போல்டர்களும் இருக்கும். ஆனால் ‘C’ தவிர ‘D’, ‘E’, ‘F’ என டிரைவ்கள் இருப்பின் அந்த எழுத்துக்கள் மீது கிளிக் செய்து அந்த அந்த டிரைவில் உள்ள போல்டர்களையும் பைல்களையும் காணலாம். ‘C’ டிரைவில் அனைத்து போல்டர்களும் காட்டப்பட்டாலும் ஒரு சில போல்டர்கள் நீங்கள் திறந்து பார்க்கக்கூடாத போல்டர்களாக இருக்கும். இவற்றை நீங்கள் திறக்க முயற்சிக்கையில் இந்த பைல்கள் இயக்கத்திற்கு ஆதாரமானவை; எனவே திறக்க முயற்சிப்பது சிக்கலை உண்டாக்கும் என்பது போன்ற எச்சரிக்கை செய்திகள் காட்டப்பட்டு அந்த போல்டர்கள் திறக்கப்படும். பொதுவாக இது போன்ற எச்சரிக்கை செய்திகள் வந்தபின்னர் திறக்கப்படும் போல்டர்களில் உள்ள பைல்களை எடிட் செய்திடக் கூடாது; அழிக்கவும் கூடாது. இவற்றில் புரோகிராம் பைல்கள் மற்றும் சிஸ்டம் பைல்கள் அடங்கிய போல்டர்களும் விண்டோஸ் போல்டர்களும் இருக்கும். இவை கம்ப்யூட்டர் இயக்கத்திற்கு மிக முக்கியமானவை. இவற்றை திறப்பதுவும் திருத்துவதும் கூடாது. விண்டோஸ் மற்றும் அப்ளிகேஷன் புரோகிராம்கள் இயங்க, இவை அப்படியே பதிந்த நிலையில் இருப்பது அவசியம்.

பைல்களையும் போல்டர்களையும் காட்டும் விண்டோஸ் எக்ஸ்புளோரரைத் திறக்க விண்டோஸ் (Windows+E) கீகளை அழுத்தலாம். அல்லது Start பட்டனில் ரைட் கிளிக் செய்து அதில் மேல் எழும் மெனுவில் இரண்டாவதாக உள்ள பிரிவில் கிளிக் செய்யலாம்.
எல்லா பைல்களும் டிஸ்க் ஸ்பேஸ் எடுத்துக் கொள்கின்றன. நாம் ஹார்ட் டிஸ்க்கில் தானே எழுதுகிறோம். எனவே எந்த அளவு இடத்தை இவை எடுத்துக் கொள்கின்றன என்று தெரிந்து கொள்வது நல்லதுதானே. எவ்வளவு ஹார்ட் டிஸ்க் ஸ்பேஸை தற்போது உள்ள பைல்கள் எடுத்துக் கொண்டிருக்கின்றன? இன்னும் எவ்வளவு இடம் உள்ளது? என்று அறிந்து கொள்ள மை கம்ப்யூட்டரை டபுள் கிளிக் செய்த பின் டிரைவிற்கான எழுத்தில், எடுத்துக்காட்டாக சி:, டபுள் கிளிக் செய்திடாமல் ரைட் கிளிக் செய்திடுங்கள். இதில் கிடைக்கும் மெனுவில் கீழாக உள்ள புராபர்ட்டீஸ் என்பதில் கிளிக் செய்தால் டிஸ்க் வட்டவடிவமாகக் காட்டப்பட்டு அதில் பயன்படுத்தப்பட்ட இடமும் காலியாக உள்ள இடமும் காட்டப்படும். எவ்வளவு அளவு என்பது மேலாகக் குறிப்பிடப்பட்டிருக்கும். டிஸ்க்கில் இடம் குறைந்து அடுத்து வரும் பைல்களை எழுதுவது சிரமமாக இருக்கும் என்று எண்ணினால் உடனே தேவையற்ற பைல்களை நீக்கலாம். நீக்க வேண்டிய பைல்களை அடையாளம் கண்டு கொண்டால் அவை இருக்கும் டிரைவ் மற்றும் போல்டர் சென்று பைலின் மீது ரைட் கிளிக் செய்து வரும் மெனுவில் Delete பட்டனை அழுத்தினால் பைல் அழிக்கப்படும். ஆனால் அவ்வாறு அழிக்கப்படும் பைல்கள் கம்ப்யூட்டரில் உள்ள ரீசைக்கிள் பின்னில் சென்று அமர்ந்து கொள்ளுங்கள். நீங்கள் தவறான பைலை அழித்துவிட்டு பின் மீண்டும் அதனை வேண்டும் என உணர்ந்தால் அதனை மீட்பதற்காகத்தான் இந்த ஏற்பாடு. ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லுமுன் இந்த பைலை அழிக்க வேண்டுமா? என்ற கேள்வி கேட்கப்பட்டு பின் தான் அந்த பைல் அழிக்கப்படும். அப்படியே அழிந்தாலும் அது ரீசைக்கிள் பின்னில் இருப்பதால் எப்போது வேண்டுமானாலும் பெற்றுக் கொள்ளலாம். ஆனால் நாம் இடம் காலியாக வேண்டும் என்று அழிக்கையில் மீண்டும் அந்த பைலை ரீ சைக்கிள் பின்னில் வைத்திட வேண்டிய அவசியமில்லை. எனவே உடனே அதை அங்கிருந்தும் அழித்துவிடலாம். ரீசைக்கிள் பின் ஐகானை அழுத்தி கிடைக்கும் மெனு மூலம் பைலை அழிக்கலாம். அல்லது முதலில் பைலை அழிக்க முயற்சிக்கையிலேயே ஷிப்ட் கீ அழுத்தி டெலீட் கீ அழுத்தினால் பைல் ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லாமல் அழிக்கப்படும். ஆனால் இதனை நாம் திரும்பப் பெற முடியாது.

0 இணையம் 2009 தந்த இலவச புரோகிராம்கள்

சென்ற ஆண்டில் பல நூற்றுக்கணக்கான பயன்பாட்டு புரோகிராம்கள் இணையத்தில் புதிதாய்க் கிடைத்தன. பலவகையான பிரிவுகளில் இவை இருந்தன. மக்கள் தங்களுக்குத் தேவையானவற்றைத் தேடிப்பிடித்து டவுண்லோட் செய்து பயன்படுத்தினர். இருப்பினும் சில புரோகிராம்கள் அனைவருக்கும் தேவையானதாய் இருந்தன. மிக அதிக எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்டதன் அடிப்படையில் கீழே உள்ள புரோகிராம்கள் பட்டியலிடப்பட்டுள்ளன. இவற்றில் ஏதேனும் உங்களுக்குத் தேவையானதாக இருந்தால் இப்போதும் டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.

1. விண்டோஸ் 7: ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில் விண்டோஸ், 2009ஆம் ஆண்டு பலநிலைகளில் மக்களைச் சென்றடைந்தது. ஏதாவது ஒரு வகையில் மிக அதிக எண்ணிக்கையில் டவுண்லோட் ஆன புரோகிராம் ஆக விண்டோஸ் 7 பதிப்பு இருந்தது. சோதனைப் பதிப்பாக பல நிலைகளிலும், இறுதிச் சோதனைப் பதிப்பாகவும் இது மக்களைச் சென்றடைந்தது. முதலில் ஜனவரியில் (http://lifehacker.com/5127294/windows7betareadyforofficialdownload) என்ற தளத்தில் இதன் சோதனைத் தொகுப்பு கிடைத்தது. ஆனால் இதில் நிறைய பிரச்சினைகள் இருந்தன. எனவே உடனே திரும்பப் பெறப்பட்டது; மீண்டும் (http://lifehacker.com/5128018/windows7betaproductkeysnowavailableforreal) தரப்பட்டது. அதிகமான எண்ணிக்கையில் மக்கள் இதனை டவுண்லோட் செய்திட முயற்சித்ததில் பிரச்சினை ஏற்பட்டு இதன் காலக் கெடு நீட்டிக்கப்பட்டது.(http://lifehacker.com/5128404/microsoftextendswindows7betaavailabilityuntiljanuary24th) அடுத்து மே மாதம் இதன் இறுதிச் சோதனை பதிப்பு தரப்பட்டது (http://lifehacker.com/5240198/windows7rcavailablefordownloadnow) இந்த விண்டோஸ் 7 சோதனைப் பதிப்பு தந்த (http://lifehacker.com/5131371/windows7betasmanyfree andlegitthemes) அழகான தீம்களை மக்கள் டவுண்லோட் செய்து பயன்படுத்தத் தொடங்கினார்கள்.

2. போர்ட்டபிள் உபுண்டு லினக்ஸ் (Portable Ubuntu for Windows): லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம் தொடர்ந்து தன் ஆதரவாளர் எண்ணிக்கையைச் சென்ற ஆண்டில் உயர்த்தியது. இதனால் பல்வேறு பதிப்புகள் வெளியாயின. இவற்றில் அதிகம் டவுண்லோட் செய்யப்பட்ட சிஸ்டம் பைல் உபுண்டு லினக்ஸ் போர்ட்டபிள் எடிஷனாகும்.http://sourceforge.net/projects/portableubuntu// என்ற முகவரியில் உள்ள தளத்தில் இருந்து போர்ட்டபிள் எடிஷன் மிக அதிகமாக இறக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டது. விண்டோஸ் டெஸ்க்டாப்பிலேயே இதனைப் பயன்படுத்தலாம் என்ற வசதிதான் இதன் அடிப்படைக் காரணமாக இருந்தது.

3. செவன் ரீமிக்ஸ் எக்ஸ்பி (Seven Remix XP):: விண்டோஸ் 7 பதிப்பு வெளியானவுடன், பலர் தங்களுக்கும் அந்த அனுபவம் வேண்டும் என விரும்பினார்கள். ஆனால் அவர்களிடம் இருந்த கம்ப்யூட்டர் ஹார்ட்வேர் அதற்கு இடமளிக்கவில்லை. இருப்பினும் விண்டோஸ்7 அனுபவத்தினை எக்ஸ்பி சிஸ்டத்திலேயே பெற்றுக் கொள்ளும் வகையில் வெளியான புரோகிராம் பலரின் கவனத்தைக் கவர்ந்தது. அதிகமான எண்ணிக்கையில் டவுண்லோட் ஆன புரோகிராம்களில் இதுவும் ஒன்று. http://niwradsoft.blogspot.com/என்ற தளத்தில் இது கிடைக்கின்றது.

4. நினைட் (Ninite ): விண்டோஸ் 7 வந்ததனால் உருவான பல பயன்பாட்டு புரோகிராம்களில் இதுவும் ஒன்று. ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைக் கம்ப்யூட்டரில் மாற்றுகையில், ஏற்கனவே பயன்படுத்தி வந்த புரோகிராம்களையும் அதற்கான டிரைவர்களையும், மீண்டும் புதிய சிஸ்டத்தில் அமைப்பது பெரிய வேலையாக இருக்கும். மொத்தமாக அவற்றைத் தன்னிடத்தில் வாங்கிக் கொண்டுப் பின் புதிய சிஸ்டத்தில் அவற்றைச் சரியாகப் பதியும் வேலையை இந்த புரோகிராம் செய்கிறது. எத்தனை புரோகிராம்கள் இருந்தாலும் இதன் மூலம் மிக எளிதாக அவை அனைத்தையும் பதிந்துவிடலாம். எனவே தான் இது மிக அதிகமான எண்ணிக்கையில் டttணீ://ணடிணடிtஞு.ஞிணிட்/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்யப்பட்டது.

5. எக்ஸ்பி/விஸ்டாவில் விண்டோஸ் 7 ஷார்ட் கட்ஸ்: விண்டோஸ் 7 சிஸ்டம் வந்ததனால் ஏற்பட்ட இன்னொரு விளைவு இது. விண்டோஸ் 7 சிஸ்டம் தரும் ஷார்ட் கட் கீ தொகுப்புகள் ஏராளம். இதுவரை வந்த விண்டோஸ் சிஸ்டங்களில் உள்ள ஷார்ட் கட் கீகளைக் காட்டிலும் அதிகம். எனவே இவற்றைப் பயன்படுத்திப் பார்க்க விரும்பிய மக்களுக்காக இந்த புரோகிராம் வடிவமைத்துத் தரப்பட்டது. விண்டோஸ் 7 தரும் மிகச் சிறந்த ஷார்ட் கட் கீகளை, அதற்கு முன் வந்த விண்டோஸ் இயக்கங்களில் பயன்படுத்தும் வகையில் இந்த புரோகிராம் இயங்குகிறது. இதனை http://lifehacker.com/5133039/windows7shortcutsenablesthebestwin7shortcutsinxporvista என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து பயன்படுத்தலாம்.

6. ஏவிஜி இலவச ஆண்ட்டி வைரஸ்: வைரஸ்கள் நாளுக்கு நாள் பலவகைகளில் பெருகியதால், கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் பலரும் நாடியது இலவச ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களைத்தான். அந்த வகையில் அதிகம் டவுண்ட்லோட் ஆன புரோகிராம் ஏவிஜி 9 ப்ரீ புரோகிராம் (http://free.avg.com /wwen/download? prd=afg#tba2). இதில் பல கூடுதல் வசதிகள் தரப்பட்டது இதன் சிறப்பாகும். அதிகம் பிரபலமான இலவச ஆண்ட்டி வைரஸ் இது.

7. கூகுள் குரோம்: கூகுள் குரோம் பிரவுசர் வெளியாகி ஓராண்டு தான் ஆகியது. ஆனால் மிக அதிகமான எண்ணிக்கையில் டவுண்லோட் செய்யப்பட்ட பிரவுசராக இது தொடக்கத்தில் இருந்தே இடம் பெற்றது. இதனை டவுண்லோட் பயன்படுத்திப் பார்த்தவர்கள் இதன் வேகத்தைப் புகழ்ந்தனர். ஆனால் தொடர்ந்து பயன்படுத்தாமல் மீண்டும் பழைய பிரவுசருக்கே சென்றவர்கள் ஏராளம். இரண்டாம் பதிப்பு மே மாதமும், குரோம் 3 செப்டம்பரிலும் வெளியாகின.

8. பயர்பாக்ஸ்: பிரவுசர் மார்க்கெட்டில் தொடர்ந்து நிலையாக மக்களைக் கவரும் பிரவுசராக பயர்பாக்ஸ் (http://www.mozilla .com/enUS/firefox/firefox.html) பெயர் எடுத்து வருகிறது. இதன் பயர்பாக்ஸ் பதிப்பு 3.5, 2009 ஆம் ஆண்டில் பிரபலம் அடைந்தது. டவுண்லோட் செய்யப்பட்டதிலும் சாதனை படைத்தது. இதன் சார்பாக வெளியான ஆட் ஆன் தொகுப்புகள் இதன் இயக்கத்திற்கு வலு சேர்த்தன. அந்த வகையில் டவுண்லோட் செய்யப்பட்ட ஆட் ஆன் தொகுப்புகளும் அதிகம்.

9. தண்டர்பேர்ட் 3 (Thunderbird 3): மொஸில்லாவின் இன்னொரு மக்கள் அபிமான சாப்ட்வேர் இது. எளிமையான, பயன்படுத்த வேகமான இமெயில் கிளையண்ட் புரோகிராம் இது. இதன் பதிப்பு 3 அண்மையில் வெளியாகி அதிகமாக டவுண்லோட் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்புதான் தண்டர்பேர்ட் பதிப்பு 2 வெளியானது. தற்போது வெளியாகியுள்ள பதிப்பு 3ல் பல புதிய வசதிகள் தரப்பட்டுள்ளன.http://www.mozillamessaging.com/enUS/thunderbird/ முகவரியை அணுகவும்.

10. கம்ப்யூட்டர் ரிப்பேர் கிட் (Computer Repair Kit): கம்ப்யூட்டரில் ஏற்படும் பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு காண உதவும் புரோகிராம்களை இங்கு மொத்தமாக ஒரே புரோகிராமாகப் பெறலாம். இதன் பயன்தன்மை காரணமாகப் பலரால் http://www.technibble. com/computerrepairutilitykit/என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டது.

0 பயனுள்ள தகவல்கள் தரும் பாதுகாப்பான தளம்

அண்மையில் இணையத்தில் உலா வந்த போது பார்த்த ஒரு தளத்தின் மீது நான் தீராத ஆசை கொள்ளும் அளவிற்கு அது என்னைக் கவர்ந்தது. கம்ப்யூட்டர் மலருக்கான பல டிப்ஸ்களை மட்டுமின்றி, பல பயனுள்ள தகவல்களையும் அது தந்தது. மேலும் நம்மை உற்சாகப்படுத்த கேம்ஸ்கள் பலவற்றையும் அது கொண்டுள்ளது. இந்த தளத்தின் முகவரி:http://www.safesurfer.org/ இந்த தளம் பல பிரிவுகளைக் கொண்டு அழகாக நம்மைக் கவரும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு சென்றவுடன் தளம் அமையும் விதம் பாராட்டத்தக்கதாய் அமைகிறது. இதன் பிரிவுகளைப் பார்க்கலாம்.
Forum: இதில் இந்த தளத்தைக் காண வருபவர்கள் கூறும் கருத்துக்களைப் படிக்கலாம். நீங்களும் உங்கள் கருத்தை எழுத வேண்டும் என எண்ணினால், இதில் பதிந்து கொள்ள வேண்டும். அதற்கு எந்த நிபந்தனையும் இல்லை என்பதால், இந்த தளம் வரும் அனைவரும் இதில் தங்களைப் பதிந்து கொள்வார்கள்.
2� Blog: நாம் சில கருத்துக்களை பைசாவுக்கு புண்ணியம் இல்லாதது என்று வேடிக்கையாகவும் (சில வேளைகளில் சீரியசாகவும்) கூறுவோம் அல்லவா! அது போல்தான் இதுவும். இங்கு நீங்களும் உங்களைப் பதிந்து கொண்டு எழுதலாம். டிப்ஸ், ட்ரிக்ஸ் மற்றும் கம்ப்யூட்டர், இன்டர்நெட் குறித்த தலைப்புகளில் தகவல்கள் ஆகியவற்றைத் தரலாம்.
The Buzz : இந்தப் பிரிவில் நாம் ஆர்வம் கொண்டுள்ள பல தலைப்புகளில் அண்மைக் காலத்திய செய்திகளையும் தகவல்களையும் படிக்கலாம். ஸ்போர்ட்ஸ், சயின்ஸ், உடல்நலம், தொழில் நுட்பம் எனப் பல பிரிவுகளில் தகவல்கள் கிடைக்கின்றன.
Lingo: இன்டர்நெட் குறித்த ஸ்லாங் என்னும் வழக்குச் சொற்கள் மற்றும் சுருக்குச் சொற்களைக் காணலாம். மேலே உள்ள ஆங்கில எழுத்துக்கள் வரிசையில் உள்ள எழுத்து ஒன்றில் அழுத்தினால், அந்த எழுத்தில் தொடங்கும் சொற்கள் குறித்த விளக்கங்கள் கிடைக்கும்; அல்லது ஸ்குரோல் செய்து கீழாக இதன்பக்கங்களைக் காணலாம்.
Tips’n’Trix: நான் அதிகம் விரும்பும் பிரிவு. கம்ப்யூட்டர் மற்றும் இன்டர்நெட் குறித்த பல டிப்ஸ் மற்றும் டிரிக்ஸ் இந்தப் பிரிவில் தரப்படுகிறது. அது மட்டுமின்றி நீங்கள் கட்டாயம் சென்று பார்க்க வேண்டிய தளங்கள் என்று ஒரு பட்டியல் காட்டப்படுகிறது.
மேற்கண்ட பிரிவுகளுடன் இன்னும் சில பயனுள்ள பிரிவுகள் உள்ளன. அவற்றை நீங்களே இந்த தளம் சென்று அறிந்து கொள்ளலாம்.

0 டிவி க்களில் ஸ்கைப்

வாய்ஸ் ஓவர் புரோட்டோகால் தொழில் நுட்பத்தின் உதவியுடன் இன்டர்நெட் இணைப்பில் உள்ள இருவர், தங்களின் பெர்சனல் கம்ப்யூட்டர், மொபைல் போன், கார்ட்லெஸ் போன், வீடியோ போன் ஆகியவற்றின் மூலம் திரையில் ஒருவரை ஒருவர் பார்த்து உரையாடிக் கொள்ளலாம். இதனால் ஆயிரக்கணக்கான மைல்கள் தள்ளி இருப்பவர்கள் கூட ஒரே அறையில் அமர்ந்து பேசுவது போன்ற நிலை ஏற்பட்டு வருகிறது. இந்த வகையில் இலவச அப்ளிகேஷன் புரோகிராம்களைப் பல நிறுவனங்கள் அளித்து வந்தாலும், ஸ்கைப் இதில் முன்னணி இடம் பிடித்துள்ளது.
இனி இந்த வகைத் தொடர்பினை, “டிவி’க்கள் வழியாகவும் தருவதற்கு ஸ்கைப் முன்வந்துள்ளது. முதன் முதலாக “டிவி’க்களில் இந்த தொழில் நுட்பத்தினை ஸ்கைப் கொண்டு வருகிறது. இதற்கான ஒப்பந்தத்தினை எல்.ஜி. மற்றும் பானாசோனிக் நிறுவனங்களுடன் மேற் கொண்டுள்ளது. இந்த இரு நிறுவனங்களும் இன்டர்நெட் வசதி இணைந்த “டி.வி’க்களைத் தயாரித்து வழங்கி வருகின்றன.
இணையத் தொடர்பினை மேற்கொள்ளும் வகையில் வடிவமைக்கப்படும் தொலைக் காட்சிப் பெட்டிகள் மூலம் வீடியோ அழைப்புகளை மேற்கொள்ளலாம். இதற்கான புரோகிராமினை ஸ்கைப் வழங்குகிறது. பானாசோனிக் நிறுவனம் இது பற்றிக் கூறுகையில் தங்களின் 2010 Viera Castenabled HDTV செட்களை வைத்திருப் பவர்கள் இந்த தொழில் நுட்பத்தை எளிதில் பயன்படுத்தலாம் என்று தெரிவித்துள்ளது. வர்த்தக ரீதியாகப் பொது மக்களுக்கு இந்த வகை “டிவி’க்கள் வரும் மாதங்களில் கிடைக்கும். எல்.ஜி. நிறுவனம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் Netcast Entertainment Access தொழில் நுட்பம் உள்ள தங்கள் நிறுவனத்தின் 26 மாடல் எல்.இ.டி., எல்.சி.டி. மற்றும் பிளாஸ்மா டிவிக்களில் ஸ்கைப் புரோகிராமினைப் பயன்படுத்தி வீடியோ கால்களை மேற்கொள்ளலாம் என்று கூறியுள்ளது.
வீடியோ அழைப்புகளை இந்த “டிவி’க்கள் மூலம் மேற்கொள்ள, இந்த இரு நிறுவனங்களும், மைக்ரோபோன் இணைந்த வீடியோ கேமராக்களை “டிவி’க்களில் இணைக்கும் வகையில் வடிவமைத்துத் தர இருக்கின்றன. இன்டர்நெட் இணைப்பு குறித்துக் கூறுகையில் குறைந்தது விநாடிக்கு 1 மெகா பிட் வேகம் உள்ள இணைப்பு வேண்டும் என ஸ்கைப் அறிவித்துள்ளது. ஸ்கைப் இணைக்கும் வகையில் உள்ள டிவிக்களை எல்.ஜி. வரும் ஏப்ரல் மாதத்திற்குள்ளும், ஸ்கைப் இணைந்த எச்.டி.டி.விக்களை வரும் மார்ச் மாதத்திற்குள் பானாசோனிக்கும் தருவதாக உறுதி அளித்துள்ளன.
இதுவரை உயர் தொழில்நுட்ப ஆய்வு மையங்கள், சில சிறப்பு கருத்தரங்க அமைப்புகளில் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த இந்த தொழில் நுட்பம் மக்களுக்காக வர்த்தக ரீதியில் கிடைக்கப் போகிறது என்பது, தொலை உணர்வு வசதியை மக்களுக்கு அளிப்பதில் நாம் இன்னும் ஒரு படி உயர்கிறோம் என்பதைக் காட்டுகிறது. இனி பல்லாயிரக்கணக்கான மைல் தொலைவில் வசிக்கும் தங்கள் பிள்ளைகளை, பெற்றோர்கள் தங்கள் டிவி திரைகள் மூலம் தங்களின் வீடுகளுக்கே கொண்டு வந்து பார்த்துப் பேசி மகிழலாம்.

0 ஐ.பி.எல். போட்டி லைவ்வாக இன்டர்நெட்டில்

மீண்டும் ஒரு கிரிக்கெட் திருவிழா வரும் மார்ச் 12 முதல் இந்தியாவில் தொடங்க இருக்கிறது. இந்த திருவிழாவினை சோனி மேக்ஸ் டிவி சேனல் இந்தியாவில் ஒளிபரப்ப இருக்கிறது. இந்த சேனல் இல்லாத கேபிள் வைத்திருப்பவர்கள் கிரிக்கெட் போட்டியை இன்டர்நெட்டிலேயே கண்டு மகிழலாம். இதற்கான ஒப்பந்தம் ஒன்றை கூகுள் இந்தியா நிறுவனமும் ஐ.பி.எல். அமைப்பும் அண்மையில் ஏற்படுத்திக் கொண்டுள்ளன. www.youtube.com/ipl என்ற ஒரு தனி இணைய தளம் ஒன்று இதற்கென உருவாக்கப்பட்டுள்ளது. கூகுள் நிறுவனம் ஐ.பி.எல். போட்டிகள் குறித்த தகவல்களுக்கான ஆன்லைன் உரிமையை இரண்டு ஆண்டுகளுக்குக் கொண்டிருக்கும். தள ஒளிபரப்பு மூலம் கிடைக்கும் விளம்பரம் மற்றும் ஸ்பான்ஸார்ஷிப் வருமானத்தினை கூகுள் மற்றும் ஐ.பி.எல். பகிர்ந்து கொள்ளும்.
கூகுள் முதல் முறையாக ஒரு பெரிய அளவிலான கிரிக்கெட் போட்டியை லைவ் ஸ்ட்ரீமிங் மூலம் தன் தளத்தில் ஒளி பரப்ப இருக்கிறது. 45 நாட்களில் நடைபெறும் 60 போட்டிகள் ஒளி பரப்பப்படும். போட்டிகளின் நேரடி ஒளிபரப்பு மட்டுமின்றி, ரசிகர்களுக்கு போட்டிகளின் ஹை லைட்ஸ், விளையாட்டு வீரர்களுடனான பேட்டிகள், விக்கெட் வீழ்ச்சி, டாப் சிக்ஸ், பரிசு வழங்கும்விழா, பிட்ச் குறித்த அறிக்கை என இன்னும் பல சிறப்பு ஒளிபரப்புகளும் இருக்கும். இவற்றை ரசிகர்கள் அந்த நேரத்தில் பார்க்க முடியவில்லை என்றாலும், எப்போது வேண்டு மானாலும் தளத்திலிருந்து பார்க்க முடியும் என்பது இதன் சிறப்பாகும்.
இவற்றுடன் இன்னொரு சிறப்பான ஏற்பாட்டி னையும் கூகுள் மேற்கொள்கிறது. இந்த போட்டிக்கென ஸ்பெஷல் ஆர்குட் தளம் ஒன்றை அமைக்கிறது. இதன் மூலம் ரசிகர்கள், விளையாட்டு வீரர்களுடன், குறிப்பாக மேன் ஆப் த மேட்ச் ஆகத் தேர்ந்தெடுப்பவர்களுடன் சேட்டிங்கில் ஈடுபடலாம். இவர்களுடன் மட்டுமின்றி போட்டிகளுடன் தொடர்பு டைய அனைவருடனும் சேட் செய்து மகிழலாம்.
இப்போதே இவற்றைத் திட்டமிட விரும்புபவர்கள் http://webtrickz.com/ipl3schedule என்றமுகவரியில் உள்ள தளம் சென்று, ஐபிஎல் போட்டி கால அட்டவணையைப் பெற்றுக் கொள்ளலாம். வரும் மாதங்களில் அலுவலகங்களில் கம்ப்யூட்டர் களில் தங்கள் அலுவலக சர்வர்களில் பணிபுரிபவர்கள், கூடுதலாக ஐ.பி.எல். கூகுள் தளங்களையும் திறந்து வைத்துப் பார்த்துக் கொண்டே பணியாற்றுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

0 டூப்ளிகேட் பைல்களை நீங்குங்கள்

நம் கம்ப்யூட்டரில் தொடர்ந்து செயல்படுகையில், பல பைல்களை காப்பி எடுத்து வெவ்வேறு டைரக்டரிகளில் வைத்திருப்போம். போட்டோக்களை எடுத்து, பின் அவற்றை பலவகை பிரிவுகளில் அடுக்கி வைக்க, பல போல்டர்களில் ஒரே போட்டோவின் பல நகல்களை வைத்திருப்போம். அதே போல பாடல் பைல்கள். பாடல்களை டவுண்லோட் செய்து, அல்லது வேறு சிடிக்களில் இருந்து காப்பி செய்து வைத்திருப்போம். நம் உறவினர், தம்பி, தங்கை அவர்களுக்குப் பிடித்த பாடல்களாக அவற்றிலிருந்து பொறுக்கி எடுத்து போல்டர்களை அமைத்து வைப்பார்கள். இதனால் ஒரே பாடல் பைல் பல போல்டர்களில் காப்பி ஆகிப் பதியப்பட்டிருக்கும்.
சிலர் டெஸ்க்டாப்பில் இருந்துதான் பைல்களை இமெயில்களுடன் அட்டாச் செய்து அனுப்புவார்கள். போல்டருக்குள் போல்டரில் பைல் இருந்தால், அவற்றின் இடத்தை பிரவுஸ் செய்து சுட்டிக் காட்ட சிரமப்பட்டு, டெஸ்க்டாப்பில் அதனை காப்பி செய்து அட்டாச் செய்து அனுப்புவார்கள். ஆனால் அனுப்பிய பின்னர், அதனை டெஸ்க்டாப்பிலிருந்து நீக்க மறந்து போவார்கள்.
இப்படி நம் கம்ப்யூட்டரிலிருந்து பைல்கள், ஒரே பெயரிலோ, அல்லது வெவ்வேறு பெயர்களிலோ, கம்ப்யூட்டரில் இருந்து கொண்டு, ஹார்ட் டிஸ்க்கின் இடத்தை அடைத்துக் கொண்டிருக்கும். இதனை எப்படி நீக்குவது? சில வேளைகளில் பெயர்களை மாற்றிவிட்டால், டூப்ளிகேட் பைல்களை நீக்குவது எப்படி? இதற்கென புரோகிராம் ஒன்று இணையத்தில் இலவசமாகக் கிடைக்கிறது. இதன் பெயர் Duplicate Finder. இதன் மூலம் டூப்ளிகேட் போட்டோக்கள், டாகுமெண்ட்கள், ஸ்ப்ரெட்ஷீட்கள், எம்பி3 பாடல்கள் மற்றும் பலவகையான டூப்ளிகேட் பைல்களைக் கண்டறிந்து நீக்கலாம்.
இதனை http://www.easyduplicatefinder.com/ என்ற முகவரியில் உள்ள தளத்திலிருந்து டவுண்லோட் செய்து கொள்ளலாம். இது ஒரு எக்ஸ்கியூட்டபிள் பைல்; அளவும் சிறியதுதான். மேலும் விரைவாக இன்ஸ்டால் ஆகிறது. பின் இதனை இயக்கி பைல்களை அடையாளம் கண்டு அழிக்கலாம்.
1. இது மிகத் திறமையான தேடும் தொழில் நுட்பத்தினைக் கொண்டுள்ளது. அதன் மூலம் பைல்களை அதன் பைட்களில் தேடுகிறது. இது பைனரி தேடல் என்பதால், விரைவாக பைல் கண்டறியப்படுகிறது. முழு பைலும் ஒரே மாதிரியான விஷயத்தைக் கொண்டிருக்கின்றனவா என்று கண்டறியப்படுகிறது.
2. பைல்களை அவற்றின் பெயர், அளவு போன்றவற்றின் மூலமும் கண்டறிகிறது.
3. குறிப்பிட்ட ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட போல்டர்களிலும் பைல்களைத் தேடி அறிகிறது.
4. சிஸ்டம் பைல்களையும் போல்டர்களையும் பாதுகாக்கிறது. டூப்ளிகேட் பைல்களை ரீசைக்கிள் பின்னுக்கு அனுப்புகிறது. அல்லது நம்முடைய செட்டிங்ஸ் படி நீக்குகிறது.
5. சில குறிப்பிட்ட டூப்ளிகேட் பைல்களை, பைல்களின் பெயர்களுக்கு முன் சிறிய எழுத்துக்களைச் சேர்த்து அமைக்கிறது. அதன்பின் எந்த பைலை டெலீட் செய்வது என்று நாம் ஒதுக்கலாம்.
6. இதனைப் பயன்படுத்த நல்ல வசதியான யூசர் இன்டர்பேஸ் தரப்பட்டுள்ளது.
7. யூனிகோட் முறையில் எழுதி அமைக்கப்பட்ட பைல்களையும் கையாள்கிறது. இதனால் சீனம், தமிழ், அரபி மொழிகளில் யூனிகோட் எழுத்துருக்களில் அமைந்த பைல்களையும் கண்டறிகிறது.
இந்த புரோகிராம் மூன்று நிலைகளில் செயல்படுகிறது. முதலில் நீங்கள் எந்த போல்டர்களை சோதனைக்குள்ளாக்க வேண்டும் என்று குறிக்க வேண்டும். அதில் பைல்களின் துணைப் பெயர்களையும் (extensions) கீழ் விரி மெனுவில் காட்ட வேண்டும்.
இரண்டாவது நிலையில் ஸ்டார்ட் பட்டன் அழுத்தியவுடன், புரோகிராம் தான் கண்டறிந்த டூப்ளிகேட் பைல்களைக் காட்டும். புரோகிராம் செயல்பட்டுக் கொண்டிருக்கும்போதே, எத்தனை பைல்கள் ஸ்கேன் செய்யப்பட்டன என்பதனையும், எவை எல்லாம் டூப்ளிகேட் பைல்கள் என்றும், அவை ஹார்ட் டிஸ்க்கில் எவ்வளவு இடத்தை எடுத்துக் கொண்டுள்ளன என்றும் காட்டப்படும்.
மூன்றாவது நிலையில் நாம் அந்த பைல்களை என்ன செய்திட வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டிய நிலையில் இருக்கிறோம். பைல்களை அப்படியே விட்டுவிடுவது, வேறு பெயர் தருவது, இன்னொரு போல்டருக்கு அனுப்புவது, பைல்களைத் தேர்ந்தெடுத்து அழிப்பது ஆகிய செயல்பாடுகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கலாம்.
இந்த புரோகிராமின் சிறப்பம்சங்கள்:
1. ஒரே மேட்டர், ஒரே பெயரில் உள்ள பைல்களைக் கண்டுபிடிப்பது
2. ஒரே படம்; ஆனால் பைல் பார்மட் வேறு (எ.கா.jpg, gif) வீடியோ (avi, mpg) பாடல்கள்(mp3,mp4) என்பனவற்றுள் கண்டறிவது.
3. டூப்ளிகேட் பைல் கண்டறியும் புரோகிராம்களில் இதுவே மிக வேகமாக இயங்கக் கூடியது.
4. மிக மிக எளிதாக இயக்கவல்லது.
5. பிளாப்பி, யு.எஸ்.பி. போன்றவற்றில் வைத்தும் இயக்கலாம்.
6. பைல் பெயர்கள், பைலின் மேட்டர், பைட் / பைட் ஒப்பீடு போன்ற பல வழிகளில் கண்டறிகிறது.
7. குறிப்பிட்ட போல்டர்களில் மட்டும் உள்ள டூப்ளிகேட் பைல்களைச் சுட்டிக் காட்டும்.
8.முக்கியமான பைல்கள் இருந்தால், அவற்றை நீக்கி மற்றவற்றைத் தேடலாம்.
9. விண்டோஸ் மற்றும் நாம் குறிப்பிடும் போல்டர்களை பாதுகாப்பாகத் தன் தேடல்களிலிருந்து ஒதுக்குகிறது.
10. தேடல் முடிவுகளைப் பதிந்து வைத்து, பின் நாட்களில் தேடும்போது உதவுகிறது.
இதன் மூலம் நாம், 1) தேவையின்றி பயன்படுத்தப்பட்டிருக்கும் டிஸ்க் இடத்தை கண்டறிந்து பயன்படுத்தலாம். 2) இதற்கென அதிக நேரம் செலவழிக்க தேவையில்லை. இதனால் நம் கம்ப்யூட்டர் சிஸ்டம் நல்ல ஆரோக்கியத்துடன் இருக்கும்.
கம்ப்யூட்டருக்கு அவ்வளவாகப் பழக்கமில்லா தவர்கள் இதனைப் பயன்படுத்தும்போது சற்று கவனமாக இருக்க வேண்டும். ஏனென்றால் நமக்கு மிக முக்கியமாகத் தேவைப்படும் பைலை அழித்துவிடக் கட்டளை கொடுத்துவிடக்கூடாது. இந்த பைல் விண்டோஸ் 95 முதல் அண்மையில் வந்த விண்டோஸ் 7 வரையிலும் உள்ள சிஸ்டங்களில் இயங்குகிறது. இதற்கான ராம் மெமரி 128 எம்பி இருந்தால் போதுமானது. ஹார்ட் டிரைவில் ஐந்து எம்பி இடம் இருக்க வேண்டும்.

செவ்வாய், 20 ஏப்ரல், 2010

0 விண்டோஸ் 7 Shortcut keys

1.Win + UP Arrow --> Maximize the current window

2.Win + Down Arrow--> Restore down or minimize current windows

3.Win + Left Arrow--> Dock the current window to the left half of the screen

4.Win + Right Arrrow--> Dock the current window to the right half of the screen

5.Win + [number]--> Activate and run the program pinned on Windows 7 Taskbar, running program wont be affected

6.Win + Home--> Minimize all but the current window

7.Win + Space--> Makes all windows transparent so you can see through to the desktop

8.Win + Pause/Break--> Open System Properties

9.Win + Tab--> Flip Aero 3D [press Tab to cycle between Windows]

10.Win + B--> Move focus to notification tray (the right-most portion of the taskbar)

11.Win + D--> Show/Hide desktop

12.Win + E --> Windows Explorer is launched

13.Win + F--> Search

14.Win + G--> Bring all gadgets on top and foreground

15.Win + L--> Lock Computer

16.Win + M--> Minimize all windows

17.Win + P--> Open the projection menu (generally used for laptops connected to projectors)

18.Win + R--> Run Command is launched.

19.Win + S --> OneNote Screen Clipping Tool

20.Win + T--> Show preview thumbnail of running applications in Windows Taskbar one by one without mouse over

21.Win + X--> Mobility Center

22.Win + #--> Quicklaunch

23.Win + = --> Magnifier

24.Win + [+/-]--> Enables the magnifier and zooms in/out

25.Win + Shift + Up Arrow --> Maximize vertical size

26.Win + Shift + Down Arrow --> Restore vertical size

27.Win + Shift + Left Arrow--> Jump to left monitor

28.Win + Shift + Right Arrow--> Jump to right monitor

29.Win + Shift + M--> Undo all window minimization

30.Win + Shift + T--> Cycles backwards

31.Win + Ctrl + F --> Opens the Active Directory Find Computers dialog

32.Ctrl + Right Arrow--> Move the cursor to the beginning of the next word

33.Ctrl + Left Arrow--> Move the cursor to the beginning of the previous word

34.Ctrl + Up Arrow--> Move the cursor to the beginning of the previous paragraph

35.Ctrl + Down Arrow--> Move the cursor to the beginning of the next paragraph

36.Ctrl + Click --> A pinned taskbar icon to cycle through the programas open windows (e.g. IE)

37.Ctrl + Win + Tab--> Persistent flip 3D

38.Ctrl + Shift with an arrow key --> Select a block of text

39.Ctrl with any arrow key + Spacebar--> Select multiple individual items in a window or on the desktop

40.Ctrl + Shift + Esc --> Open Task Manager directly

41.Ctrl + Shift + N --> Create new folder

0 GMail இன் theme ஐ மாற்றுவது எப்படி ? ||||| How to Change GMail theme ?

http://img717.imageshack.us/img717/7223/newgmail.png

Gmail இன் theme ஐ மாற்ற வேண்டுமா ?
Firefox ஐ டவுன்லோட் செய்து கீழே நான் சொல்வதை செய்யவும்.

புதிய Gmail எப்படி இருக்கும் என்பதை பார்க்க கீழுள்ள லிங்க் ஐ க்ளிக் செய்யவும்.
http://img717.imageshack.us/img717/7223/newgmail.png

படிமுறை 1 :
* கீழுள்ள லிங்க் ஐ க்ளிக் செய்தி இந்த Firefox Add-on ஐ இன்ஸ்டால் செய்யவும்.
https://addons.mozilla.org/en-US/firefox/addon/8434

படவிளக்கம் :
Step 1 : http://img62.imageshack.us/img62/7835/step01.png
Step 2 : http://img163.imageshack.us/img163/5308/step02m.png

படிமுறை 2 :: பின்பு Firefox ஐ Restart செய்யவும்.

0 Windows இல் உள்ள 60,000 மேற்பட்ட Crashes / Errors ஐ திருத்துவது எப்படி ?

XP Repair Pro 2009 ::::: இந்த மென்பொருளை உங்கள் கணனியில் பதிந்தால் போதும். என்னே என்ன தவறுகள் உங்கள் System இல் கானப்படதோ அவை அனைத்தும் ஒரு சோதனையின் பின்பு நிவர்த்தியாகிவிடும்.

இந்த மென்பொருள் இருபதிற்கு மேற்ப்பட்ட மென்பொருள் வைப்பக இன்னயதலன்களால் சிறந்த மென்பொருளாக அறிவிக்கப்பட்டது .
அந்த மென்பொருளின் Full Version ஐ கீழுள்ள லிங்க் ஐ க்ளிக் செய்து தரவிறக்க முடியும்.

http://hotfile.com/dl/7176552/13f3e6a/XP.Repair.Pro.2009.DotNXT.com.rar.html

0 உங்கள் கையெழுத்தை Font ஆக மாற்றுங்கள்!

அழகான, தெளிவான கையெழுத்தைக் கொண்டவரா நீங்கள்? அப்படியானால் இந்த தகவல் உங்களுக்கு வியப்பையும் மகிழ்ச்சியையும் தரும் என்பது நிச்சயம். உங்கள் கையெழுத்தையும் ஒரு Font ஆக (கணினி எழுத்துரு) மாற்றிக் கொள்ளலாம். கையெழுத்தை பொண்டாக மாற்றித் தருகிறது Fontcapture.com எனும் இணைய தளம். இது ஒரு ஓன்லைன் சேவையாகும்.

சரி, இதற்கு எந்த மென்பொருளை நிறுவிக் கொள்வது? எந்த மென்பொருளும் நிறுவ வேண்டாம். உங்களிடம் ஒரு ப்ரிண்டர், ஸ்கேனர் மற்றும் இணைய இணைப்பு இருந்தால் மட்டும் போதும்.
கையெழுத்தை பொண்ட் பைலாக மாற்ற முதலில் www.fontcapture.com எனும் இணைய தளத்திற்குப் பிரவேசியுங்கள். அவர்கள் வழங்கும் பொண்ட் டெம்ப்லேட் (template) பைலை டவுன் லோட் செய்து கொள்ளுங்கள். இது PDF பைலாகக் கிடைக்கும். அதனை ப்ரிண்ட் செய்து கொள்ளுங்கள்.
அடுத்து அந்த டெம்ப்லேட்டை இணைய தளத்தில் அறிவுறுத்தியிருப்பதன் பிரகாரம் உங்கள் கையெழுத்தால் நிரப்பிக் கொள்ளுங்கள். பின்னர் அந்த டெம்ப்லேட்டை ஒரு இமேஜ் பைலாக ஸ்கேன் செய்து மறுபடி அதே இணைய தளத்திற்குச் சென்று (upload) அப்லோட் செய்து விடுங்கள். ஒரு சில நிமிடங்களில் உங்கள் கையெழுத்தைக் கொண்ட ஒரு பொன்ட் பைலாக அதனை நீங்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம்.
என்னுடைய கையெழுத்து (தலையெழுத்து மாதிரியே) மோசமாக அமைந்து விட்டதால் நான் இதனைப் பரீட்சித்துப் பார்க்க வில்லை.

நீங்கள் ஒரு முறை முயன்று பாருங்கள்
 
Creative Commons License
Information Technolagy by Krish Entertainment is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at krishentertainment.blogspot.com.
Permissions beyond the scope of this license may be available at http://www.krishsystem.webs.com.