ஞாயிறு, 6 ஜூன், 2010

0 எக்ஸெல் டிப்ஸ், டிப்ஸ், எக்ஸெல் கிராபிக்ஸ்

ஒர்க்ஷீட் ஒன்றில் கிராபிக்ஸ் இணைப்பது பல வழிகளில் அதில் உள்ள டேட்டாவினை நமக்கு எடுத்துக் காட்டும். ஆனால் சில வேளைகளில் இந்த கிராபிக்ஸ் தேவையற்ற சமாச்சாரமாகத் தோன்றும். குறிப்பாக ஒர்க்ஷீட் பிரிண்ட் எடுக்கும் போது அது தேவையற்ற தாகத் தோன்றும். நாம் வேண்டும் போது இதனை வைத்துக் கொண்டு, வேண்டாதபோது மறைக்கும் வழியினை இங்கு காணலாம்.
நீங்கள் பயன்படுத்துவது எக்ஸெல் 97 முதல் எக்ஸெல் 2003 வரையில் எதுவாக இருந்தாலும் கீழே கண்டுள்ள வழிகளைப் பின்பற்றவும்.
1. Tools மெனு சென்று அதில் Options தேர்ந்தெடுக்கவும். எக்ஸெல் இப்போது Options dialog box காட்டும்.
2. இதில் View என்னும் டேப் தேர்ந்தெடுக்கப்பட்டதை உறுதிப்படுத்தவும்.
3. பின்னர் Hide All என்னும் ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுக்கவும்.
4. அடுத்து ஓகே கிளிக் செய்தவுடன் கிராபிக்ஸ் ஒர்க்ஷீட்டிலிருந்து மறைக்கப்படும். அவை அங்குதான் இருக்கும். பார்வையிலிருந்தும் பிரிண்ட் செய்வதிலிருந்தும் மறைக்கப்படுகிறது.
நீங்கள் எக்ஸெல் 2007 பயன்படுத்துபவராக இருந்தால் கீழ்க்காணும் வழிகளைப் பின்பற்றவும்.
1. Office பட்டனை அழுத்தி அதில் Excel Options என்னும் ஆப்ஷனைத் தேர்ந்தெடுக்கவும். Excel Options dialog box காட்டப்படும்.
2. பின் டயலாக் பாக்ஸின் இடது பக்கம் உள்ள Advanced என்னும் ஆப்ஷனில் கிளிக் செய்திடவும்.
3. இங்கு கொடுக்கப்பட்டுள்ள ஆப்ஷன்களை ஸ்குரோல் செய்து பார்க்கவும். அங்கு Display Options என்று ஒரு பிரிவினைப் பார்க்கலாம். இதில் உள்ள ட்ராப் டவுண் லிஸ்ட்டினைப் பயன்படுத்தி எந்த ஒர்க்புக் என்பதனையும் தேர்ந்தெடுக்கவும்.
4. பின் Nothing (Hide Objects) என்ற ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுக்கவும்.
5. ஓகே கிளிக் செய்தால் கிராபிக்ஸ் மறைக்கப்படும்.
இனி உங்கள் ஒர்க்ஷீட்டினை வழக்கமான முறையில் பிரிண்ட் செய்திடலாம். பிரிண்ட் செய்த பின் மீண்டும் கிராபிக்ஸ் படங்கள் ஒர்க்ஷீட்டில் காணப்பட வேண்டும் எனில் மேலே சொன்னபடி ஆப்ஷன்கள் பட்டியலில் சென்று Show All என்னும் ரேடியோ பட்டனைத் தேர்ந்தெடுக்கவும்.
முழுத்திரையில் ஒர்க்ஷீட்
எக்ஸெல் பயன்படுத்துகையில் நீங்கள் தயாரித்த ஒர்க்ஷீட்டின் தகவல்கள் மட்டுமே மானிட்டரின் முழுத் திரையில் காட்டப்பட வேண்டும் என விரும்புகிறீர்களா? View மெனு சென்று Full Screen என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். நீங்கள் எக்ஸெல் 2007 பயன்படுத்துபவராக இருந்தால், ரிப்பன் தரும் வியூ டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். அதன் பின் Workbook Views குரூப்பில் இருந்து Full Screen என்பதனைக் கிளிக் செய்திடவும்.
இவ்வாறு மாற்றியபின் உங்கள் பணியினை முழுத்திரையில் மேற்கொள்ளலாம். மேற்கொண்டு முடித்தபின் அதே பிரிவில் onscreen பட்டனை அழுத்தவும். இதனால் வழக்கமான தோற்றம் கிடைக்கும். அல்லது எஸ்கேப் (Escape) கீயையும் அழுத்தலாம்.


0 வேர்ட் டிப்ஸ்

டாகுமெண்ட் இணைக்க:
வேர்ட் தொகுப்பில் டாகுமெண்ட்களைத் தயாரிக்கையில், சில நேரங்களில் ஒரு டாகுமெண்ட் உள்ளாக, இன்னொரு டாகுமெண்ட்டை இணைக்க விரும்புவீர்கள். முழுவதுமாக கட் அண்ட் பேஸ்ட் அல்லது காப்பி அண்ட் பேஸ்ட் செய்யலாம் என்கிறீர்களா? இதில் எங்கேனும் சிறிய தவறு ஏற்பட்டால் டெக்ஸ்ட் சின்னபின்னமாகிவிடும். பின் எப்படி இணைப்பீர்கள்? இதற்கெனவே வேர்ட் ஒரு வழி தருகிறது. டாகுமெண்ட்டில் INCLUDETEXT என்ற பீல்டை உருவாக்கி விட்டால் போதும். அதற்கான வழியை இங்கு பார்க்கலாம்.
1. முதலாவதாக, டாகுமெண்ட்டை இணைக்க வேண்டிய இடத்தில் field braces உருவாக்கும் அடைப்புக் குறிகளை அமைக்கவும். இதற்கு மிகவும் கஷ்டப்பட வேண்டாம். ஜஸ்ட், கண்ட்ரோல் + எப்9 (Ctrl+F9) அழுத்தினால் போதும்.
2. இந்த பீல்டு அடைப்புக் குறிகளுக்குள்ளாக INCLUDETEXT என்ற சொல்லை அமைத்து, பின் அதனை அடுத்து ஒரு ஸ்பேஸ் விட்டு, இணைக்க வேண்டிய டாகுமெண்ட் பெயரை அமைக்கவும். எடுத்துக்காட்டாக நீங்கள் Myfile.doc என்ற டாகுமெண்ட் பைலை இணைக்க வேண்டும் என்றால், உங்களுடைய மூல டாகுமெண்ட்டில் அமைக்கப்படும் அடைப்புக்குறிகளும், உள்ளே அமைக்கப்படும் டெக்ஸ்ட்டும் – {INCLUDETEXT ‘MyFile.Doc’} – என்றவாறு அமையும்.
உடன் F9 அழுத்தி பீல்டை அப்டேட் செய்திட்டால், டாகுமெண்ட் இணைக்கப் படும். இந்நிலையில் நீங்கள் விரும்பிய டாகுமெண்ட் இணையாமல், ஏதேனும் ஓர் எர்ரர் மெசேஜ் கிடைக்கிறதா? உடனே சரி பாருங்கள். நீங்கள் உங்கள் டாகுமெண்ட் பைலுக்கான பெயரைச் சரியாக, அதன் டைரக்டரி வழிகளுடன் அமைத்திருக்கிறீர்களா என்பதனை செக் செய்திடவும். நீங்கள் அமைக்கும் டாகுமெண்ட்டும், இணைக்கப்படும் டாகுமெண்ட்டும் ஒரே போல்டரில் இருந்தால் பைலுக்கான டைரக்டரி பெயர் அமைக்க வேண்டியதில்லை. வேறு வேறு போல்டர் அல்லது டைரக்டரிகளில் இருந்தால், அதற்கான பாத் சரியாக அமைக்க வேண்டும். எனவே தவறு இருந்தால், சரி செய்திடவும். புள்ளிவிபரமும் நேரமும்
வேர்ட் டாகுமெண்ட் ஒன்றை உருவாக்கி, அதனைப் பலமுறை எடிட் செய்திருக்கிறீர்கள். சில நேரம் மற்றவர்களிடம் அலுத்துக் கொள்வீர்கள். இந்த டெக்ஸ்ட்டை எத்தனை தடவை தான் திருத்துவது! என்று. அல்லது எவ்வளவு நேரம் இதை சரி செய்திட செலவு செய்திருப்பேன் தெரியுமா என்று மற்றவர்களிடம் சொல்வீர்கள். யாராவது ஒருவர் எவ்வளவு நேரமப்பா? என்று கேட்டால் என்ன சொல்வீர்கள்? முறைத்துப் பார்ப்பீர்களா?
தேவையே இல்லை. வேர்ட் டாகுமெண்ட் பைல் இது மட்டுமின்றி இன்னும் பல தகவல்களை தொடர்ந்து கண்காணித்து, கணக்கிட்டு பதிந்து வைக்கிறது. டாகுமெண்ட் பைல் எந்த நாளில் உருவானது, என்று எடிட் செய்யப்பட்டது, மொத்தம் எத்தனை நிமிடங்கள் எடிட் செய்யப்பட்டது என்ற புள்ளிவிபரங்களை உடனுடக்குடன் அமைத்துக் கொள்கிறது. இந்த விபரங்களைக் காண வேண்டுமென்றால், டாகுமெண்ட் திறந்திருக்கும்போதே, பைல் மெனு கிளிக் செய்து, அதில் திறக்கப்பட்ட பைல் பட்டியல் மேலாக ப்ராப்பர்ட்டீஸ் என்று ஒரு பிரிவு இருக்கும். அதில் கிளிக் செய்திடவும். உடன் பைல் பெயர் இணைந்த ப்ராப்பர்ட்டீஸ் விண்டோ கிடைக்கும். இந்த சிறிய விண்டோவில் ஐந்து டேப்கள் காட்டப்படும். அதில் ஸ்டேட்டிஸ்டிக்ஸ் என்ற டேப்பில் கிளிக் செய்தால், எப்போது பைல் உருவாக்கப்பட்டது, எப்போது கடைசியாக திறக்கப்பட்டது, எடிட் செய்யபட்டது என்ற விபரங்கள் காட்டப்படும். அதன் கீழாக யார் அதனை சேவ் செய்தது என்று யூசர் நேம் காட்டப்படும். மொத்தம் பைலை எடிட் செய்த நேரம் எவ்வளவு என்று நிமிடங்களில் காட்டப்படும். அத்துடன் பக்கங்கள் எத்தனை, பாராக்கள் எவ்வளவு, வரிகளின் எண்ணிக்கை, சொற்கள், அவற்றை உருவாக்கிய எழுத்துக்கள், ஸ்பேஸ் இணைந்த கேரக்டர்கள் என அக்கு வேறு ஆணி வேறாக என்று சொல்லும் வகையில் புள்ளி விபரங்கள் கிடைக்கும்.
சில வெளிநாட்டு நிறுவனங்கள் நீங்கள் எவ்வளவு நேரம் ஒரு பைலை உருவாக்க எடுக்கிறீர்கள் என்று கணக்கு போட்டு அதற்கான கட்டணம் தருவார்கள். அவர்களுக்கு இந்த புள்ளி விபரங்கள் தான் அடிப்படையாக அமையும்.
எவ்வளவு நேரம் மொத்தம் ஒரு பைலை எடிட் செய்தீர்கள் என்று அறிய ப்ராப்பர்ட்டீஸ் சென்று தான் அறிய வேண்டும் என்பதில்லை. உங்கள் வேர்ட் டாகுமெண்ட்டிலேயே அதனை இணைக்கும் வசதியையும் வேர்ட் தருகிறது. இதற்குக் கீழ்க்கண்டபடி செட் செய்திடவும்.
1. டாகுமெண்ட்டில் எங்கு இந்த எடிட்டிங் டைம் (Editing time) காட்டப்பட வேண்டுமோ, அங்கு கர்சரை நிறுத்தவும்.
2. Insert மெனுவில் Field என்பதைத் தேர்ந்தெடுக்கவும்.
3.பீல்டு டயலாக் பாக்ஸ் (Field dialog box) காட்டப்படும். இதில் காட்டப்படும் Categories என்ற பட்டியலில் Date and Time என்பதனைத் தேர்ந்தெடுக்கவும். அங்கு கிடைக்கும் பீல்டுகளில் EditTime என்பதனையும் தேர்ந்தெடுக்கவும்.OK கிளிக் செய்து மூடவும். இனி நீங்கள் குறிப்பிட்ட இடத்தில் எடிட் செய்த நேரம் நிமிடங்களில் காட்டப்படும்.


0 பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் டிப்ஸ்

ஹெடரும் புட்டரும்:
நீங்கள் தயாரித்த பவர் பாய்ண்ட் பிரசன்டேஷன் தொகுப்பில் ஒவ்வொரு ஸ்லைடிலும் சில தகவல்களைக் காட்ட விரும்பலாம். எடுத்துக்காட்டாக குறிப்பு, சிறு தகவல்,நேரம், ஸ்லைட் எண் போன்றவற்றைத் தர விரும்பலாம். இதனை எப்படி மேற்கொள்வது என இந்த டிப்ஸில் பார்க்கலாம். ஹெடர் மற்றும் புட்டர்களை எப்படி அமைப்பது என்று தெரிந்து கொண்டால் இந்த செயல்பாட்டினை மேற்கொள்வதற்கான வழிகளை அறிந்து கொள்ளலாம்.
பிரசன்டேஷனைத் திறந்து கொண்டு View மெனு செல்லவும். அங்கு ‘Header and Footer’ என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். ‘Header and Footer’ என்ற தலைப்பில் ஒரு சிறிய டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இதில் ‘Slide’ என்ற டேப்பினைத் தேர்ந்தெடுக்கவும். இப்போது நீங்கள் என்ற ஆப்ஷன்களில் தேவையானதைத் தேர்ந்தெடுக்கலாம். அல்லது ‘Update automatically Date and time’ என்ற ஆப்ஷனையும் மேற்கொள்ளலாம். இது ‘Include on slide’ என்ற பிரிவில் கிடைக்க வரும். ஸ்லைடில் நம்பர் சேர்த்திட ‘Slide number’ என்ற பிரிவைத் தேர்ந்தெடுக்கவும். புட்டரில் சேர்த்திட ‘Footer’ என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். இதில் உள்ள பாக்ஸில் என்ன டெக்ஸ்ட் இணைத்திட வேண்டுமோ அதனை டைப் செய்திடவும். அடுத்து ஸ்லைட் டேப் செட்டிங்ஸ் அனைத்தையும் சேவ் செய்திட Apply என்ற பட்டனில் கிளிக் செய்திடவும். ‘Notes and Handouts’ என்ற டேப்பின் கீழ் ‘Header’ என்பதைத் தேர்ந்தெடுத்து அதில் ‘Date and time’ என்ற ஆப்ஷனையும் தேர்ந்தெடுக்கலாம். இவ்வாறு நீங்கள் அமைக்க விரும்பும் அனைத்தையும் தேர்ந்தெடுத்த பின்னர் ‘Apply to All’ என்பதில் கிளிக் செய்து வெளியேறினால் நீங்கள் அமைத்தபடி ஹெடர் புட்டர் இடங்களில் நீங்கள் அமைத்த டெக்ஸ்ட் மற்றும் எண்கள், தேதிகள் தெரியவரும். எதனையாவது மாற்ற வேண்டும் என எண்ணினால மேலே சொன்ன வகையில் மீண்டும் செயல்பட்டு முடிக்கவும்.
இன்டர்நெட் இன்ஸெர்ட்:
இன்டர்நெட் தளங்களில் உலா வருகையில் சில படங்களைப் பார்த்து அவற்றை உங்கள் பவர்பாய்ண்ட் பிரசன்டேஷனில் பயன்படுத்த எண்ணினால் உடனே அப்படியே காப்பி செய்து பிரசன்டேஷன் பைலில் பேஸ்ட் செய்திட வேண்டாம். அதற்குப் பதிலாக காப்பி செய்த படத்தை ஒரு பிக்சர் சாப்ட்வேரில் (பெயிண்ட், அடோப் போட்டோஷாப்) பேஸ்ட் செய்து அதனை உங்கள் வசதிக்கேற்ற பார்மட்டிற்கு மாற்றி பின் Insert, Picture, From File என்ற கட்டளைகளைக் கொடுத்து படத்தை அமைத்திடுங்கள். நேரடியாக இன்டர்நெட்டில் காப்பி செய்து பிரசன்டேஷன் பைலில் ஸ்லைடில் பேஸ்ட் செய்தால் பின் ஒவ்வொரு முறை அந்த ஸ்லைடிற்குச் செல்லும்போதெல்லாம் கம்ப்யூட்டர் உடனே இணையத்தைத் தொடர்பு கொள்ள துடிக்கும். மேலும் இந்த படத்தை நீக்க வேண்டும் என திட்டமிட்டால் அதனை நீக்குவதும் கடினமாகிவிடும்.
இணையத்தில் காட்ட:
வேர்ட் பைலை எச்.டி.எம்.எல். பைலாக மாற்றி இணையத்தில் பதித்து வெளியிடுவது போல பிரசன்டேஷன் பைலையும் எச்.டி.எம்.எல். பைலாக மாற்றி இணையத்தில் பிரசன்டேஷன் பைலாக இயக்கும்படி வைக்கலாம். உங்கள் பவர்பாய்ண்ட் ஸ்லைடுகளை இணையத்தில் காட்ட கீழ்க்காணும் படி செயல்படவும்.
1. முதலில் எந்த பிரசன்டேஷன் பைலை இணையத்தில் பதிந்து காட்ட வேண்டுமோ அதனைத் திறக்கவும்.
2. அடுத்து பைல் மெனுவில் ‘Save as Web Page’ என்ற பிரிவில் கிளிக் செய்திடவும். . ‘Save As’ என்ற தலைப்புடன் ஒரு சிறிய டயலாக் பாக்ஸ் கிடைக்கும். இவ்வாறு சேவ் செய்கையில் எந்த இடத்தில் சேவ் செய்திட வேண்டுமோ அந்த டிரைவ் மற்றும் போல்டரைத் தேர்ந்தெடுக்கவும். ‘File name’ என்னும் பாக்ஸில் பைலுக்கான பெயரை டைப் செய்திடவும்.
3. இந்த ‘Save As’ டயலாக் பாக்ஸில் ‘Publish’ என்னும் பட்டனைக் கிளிக் செய்திடவும். இதில் பிரசன்டேஷன் முழுமையும் இணையத்தில் பப்ளிஷ் ஆக வேண்டுமா அல்லது குறிப்பிட்ட ஸ்லைடுகள் மட்டும் பப்ளிஷ் ஆக வேண்டுமா என்பதைத் தேர்ந்தெடுக்கலாம்.
4. அடுத்து எந்த பிரவுசர் மூலம் நீங்கள் சப்போர்ட் செய்கிறீர்கள் என்பதையும் காட்ட வேண்டும். இதனை ‘Browser support’ என்ற பிரிவில் மேற்கொள்ள வேண்டும். அதே டயலாக் பாக்ஸில் ‘Web Options’ என்ற பட்டனைக் கிளிக் செய்திடவும். இதில் இணைய அம்சங்களை வரையறை செய்திடலாம். இணையத்தில் ஸ்லைட் தோன்றும் விதத்தினை General என்பதிலும், Browsers என்பதில் சப்போர்ட் செய்திடும் பிரவுசரையும், Files என்பதில் பைல்களின் இடம் மற்றும் பெயர்களையும், Pictures என்பதில் படங்களுக்கான ஸ்கிரீன் அளவினையும், Encoding என்பதில் வெப் பேஜுக்கான என்கோடிங் திட்டத்தினையும் Fonts என்பதில் எழுத்து வகை மற்றும் அளவினையும் வரையறை செய்திடலாம். பின் இந்த வெப் ஆப்ஷன்ஸ் அனைத்தையும் சேவ் செய்திட ஓகே கிளிக் செய்திடவும். பின்னர் Publish பட்டனை கிளிக் செய்தால் உங்கள் பிரசன்டேஷன் பைல் எச்.டி.எம்.எல். பார்மட்டில் சேவ் ஆகும். இதுதான் இணையத்திற்குத் தேவையான பார்மட். இனி உங்கள் வெப் சர்வருக்கு இதனை அப்லோட் செய்திடலாம்.

0 பதற்றம் தரும் செய்திகள்

இன்டர்நெட்டில் பிரவுஸ் செய்து கொண்டிருக்கையில் அடிக்கடி சில போலியான செய்திகள், தகவல்கள் நம்மை அச்சுறுத்தி உடனே செயல்பட வைக்கும் வகையில் வருவது அண்மைக் காலத்தில் அதிகரித்து வருகிறது. இது குறித்து பல வாசகர்கள் நமக்குக் கடிதங்கள் எழுதி, இந்த செய்திகளை எப்படி எடுத்துக் கொள்வது? இதில் உள்ளவற்றை நம்பலாமா? என்று கேட்டுள்ளனர். அவை குறித்து இங்கு காணலாம்.
இந்த செய்திகள் பலவகைப்படும். சில எடுத்துக் காட்டுக்களைப் பார்க்கலாம். இவை எல்லாமே பாப் அப் விண்டோக்களில் காட்டப்படும். உங்கள் கம்ப்யூட்டர் மிக மெதுவாக இயங்குவதை அறியவில்லையா? வைரஸ் பாதித்துள்ளது. ஒரு அப்டேட் செய்திட வேண்டும். ட்ரோஜன் அல்லது மால்வேர் உங்கள் கம்ப்யூட்டரைப் பாதித்துள்ளது. இந்த லிங்க்கில் கிளிக் செய்தால் கம்ப்யூட்டர் ஸ்கேன் செய்யப்படும், வைரஸ் நீக்கப்படும்.
இவற்றைப் படித்த நாம் அனைவருமே சிறிது கலவரப்படுவோம். உடனே செயல்பட்டு லிங்க்கில் கிளிக் செய்து வைரஸை இலவசமாக நீக்க முயற்சிக்க ஆசைப்படுவோம்.
இன்னும் சில செய்திகள், பெரிய புகழ்பெற்ற நிறுவனங்களிடமிருந்து வந்தது போல் காட்டப்படும். அந்நிறுவனத்தின் வெப்சைட் முகவரி தரப்பட்டிருக்கும். நிறுவனத்தின் முகவரி தானே, சரியாகத்தானே இருக்கும் என்று எண்ணி கிளிக் செய்திடுவோம். ஆனால் ஒரு சிறு எழுத்தை மாற்றி வேறு ஒரு வெப்சைட் செல்வோம். அங்கும் நிறுவனத்தின் வெப்சைட் சாயலில் வெப்சைட் காட்டப்பட்டு நாம் மாட்டிக் கொள்வோம்.
இது போன்ற செய்திகளை நம்பி நாம் செயல்படுகையில் நம் கம்ப்யூட்டரைக் கையகப்படுத்தும் வகையில் புரோகிராம்கள் பதியப்படலாம். பின் நம் பெர்சனல் தகவல்கள் அனைத்தும், அந்த புரோகிராமினை அனுப்பியவர்கள் கைகளுக்குச் சென்றுவிடும். அல்லது கம்ப்யூட்டரை முடக்கிப் போடும் வைரஸ்கள் கம்ப்யூட்டரில் நுழைந்து அனைத்து மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தும். இது போன்ற நிகழ்வுகளை எப்படி சமாளிப்பது?
முதலில் இதைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம். எந்தக் காரணத்தைக் கொண்டும், லிங்க் ஆகத் தரப்பட்டிருக்கும் இடம் அருகே கர்சரைக் கொண்டு செல்ல வேண்டாம். எங்கும் கிளிக் செய்திட வேண்டாம். உடனே மால்வேர் அல்லது வைரஸ் உங்கள் கம்ப்யூட்டரில் இறங்க ஆரம்பிக்கும். இதனைத் தடுத்து நிறுத்தும் வழி எதுவும் திரையில் கிடைக்காது.
1. ஆல்ட் + எப்4 (Alt+F4) கீகளை சேர்த்து அழுத்தினால், இந்த எச்சரிக்கை செய்தி தரும் கட்டம் மறைந்துவிடும். அல்லது பிரவுசரே மறைந்துவிடலாம். பின் மீண்டும் பிரவுசரை இயக்கி இன்டர்நெட் பிரவுசிங்கைத் தொடங்கி விடலாம்.
2. மேலே சொன்ன வழியின் மூலம், அந்த விண்டோவினை மூட இயலவில்லை என்றால், கண்ட்ரோல்+ ஆல்ட்+டெல் (Ctrl+Alt+Del) கீகளை அழுத்தி டாஸ்க் மேனேஜரைப் (Task Manager) பெறவும். இதில் அப்ளிகேஷன்ஸ் (Applications) டேப்பில் இடது கிளிக் செய்திடவும்.
3. இங்கு உங்கள் பிரவுசர் பெயர் பட்டியலில் இருக்கும். உடன் ஏதாவது புதியதாக ஒரு புரோகிராம் தெரிகிறதா என்று பார்க்கவும். இருந்தால் அதுதான் உங்களை ஏமாற்றும் புரோகிராம். அதனைத் தேர்ந்தெடுத்து என்ட் டாஸ்க் (End Task) பட்டனை அழுத்தி, அந்த புரோகிராமினை மூடவும். அப்படி ஒன்றும் இல்லை என்றால், பிரவுசர் புரோகிராமினை மூடவும்.
சில நடவடிக்கைகளை நாம் மறக்காமல் அடிக்கடி மேற்கொள்ள வேண்டும்.
எப்போதும் உங்கள் ஆண்ட்டி வைரஸ் மற்றும் பயர்வால் புரோகிராம்களை அப்டேட் செய்து வைத்திருக்க வேண்டும். வழக்கமாகப் பயன்படுத்தும் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் இல்லாமல், வேறு ஒரு ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை டவுண்லோட் செய்து, அவ்வப்போது இயக்கிப் பார்ப்பதுவும் நல்லது. இதற்கென புரோகிராம் ஒன்றினை இணையத்தில் அண்மையில் காண நேர்ந்தது. அதன் பெயர் Malwarebytes AntiMalware. இதனை இலவசமாக டவுண்லோட் செய்து கம்ப்யூட்டரில் இயக்கலாம். கிடைக்கும் இணைய தள முகவரி:http://malwarebytes.org/

0 கற்கும் மாணவர்களுக்கும், கற்றுக் கொடுக்க எண்ணும் பேராசிரியர்களுக்கும், ஆய்வு செய்து வரும் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் ஓர் அருமையான இணையதளம்

கற்றுத் தேர்ந்தவர்களோடு நாம் பழகினால், நாமும் பல விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம். மேலும் நாம் கற்றதையும் மற்றவரோடு பகிர்ந்து கொள்ளலாம். இதற்கு இன்டர்நெட்டில் எங்கு செல்வது? நமக்கென ஒரு வலைமனை (Blog) அமைத்து வைத்தாலும், அனைவரும் வந்து படிப்பார்கள், சரியான கருத்துரைகளைப் (Comments) பதிவார்கள் என்பது என்ன உறுதி? இந்த குறையைப் போக்கும் வகையில், கற்றவர்கள் கலந்து உரையாடி, தங்களுக்குத் தெரிந்ததைப் பகிர்ந்து கொள்ள இணையத்தில் ஒரு தளம் உள்ளது. அதன் முகவரி www.wepapers.com இது ஒரு கல்வியாளர்களின் சோஷியல் நெட்வொர்க் என்று சொல்லலாம். இதில் பெரும்பாலும் பல்கலை மற்றும் கல்லூரி மாணவர்கள், பேராசிரியர்கள், ஆய்வு மாணவர்கள் இடம் பெறுகின்றனர். இதில் கலந்து கொள்வதன் மூலம் இதில் உள்ள அறிவு சார்ந்த கட்டுரைகளைப் படிக்கலாம்; நமக்குத் தெரிந்ததை இதில் பதிப்பிக்கலாம். ஆய்வுச் சுருக்கங்கள் (abstracts) கட்டுரைகள், உரைக் குறிப்புகள், ஆய்வு கட்டுரைகள் ஆகியவை இங்கு பெருமளவில் இடம் பெற்றுள்ளன. இவற்றை வகைப்படுத்தி பட்டியலிட்டுள்ளனர். 40 வகைகளில் இவை கிடைக்கின்றன. உலகின் அனைத்து பொருட்களும் இவற்றில் அடங்கும். இந்த கட்டுரைகள் பிளாஷ் தொழில் நுட்பத்தில் காட்டப்படுகின்றன. (யு–ட்யூப் மற்றும் பிற வீடியோ கிளிப்களைக் காட்டுவது போல) கட்டுரைகளின் சுருக்கம் அல்லது ஒரு சிறிய முன்னோட்டத்தினைப் பார்த்து, பின் அவற்றை டவுண்லோட் செய்திட வேண்டுமா என்பதனை முடிவு செய்து டவுண்லோட் செய்திடலாம்.
இந்த தளத்தின் இடது பக்கம் உள்ள பிரிவில், நாங்கள் விரும்பும் கட்டுரைகள் (Papers We Like) என்று ஒரு பட்டியலில், அப்போது பதியப்பட்ட சிறந்த ஏழு கட்டுரைகள் காட்டப்படுகின்றன. நீங்களாக ஒரு பொருள் குறித்து கட்டுரை ஒன்றைத் தேட வேண்டும் எனில், நடுப்பக்கத்திற்குச் செல்லலாம். இங்கு உள்ள Search கட்டத்தில் பொருள் குறித்த சொல்லை டைப் செய்து எணி என்பதில் கிளிக் செய்தால், உடன் கட்டுரைகளின் பட்டியல் கிடைக்கும். நிச்சயமாக நீங்கள் அதிசயப்படத்தக்க வகையில், தேடுவதற்குக் கொடுத்த பொருள் குறித்து பல்வேறு கோணத்தில் கட்டுரைகளின் தலைப்பைக் காணலாம்.
நீங்கள் உங்கள் கட்டுரையை இதில் பதிய வேண்டுமா? இதில் பதிவது என்பது மிக மிக எளிமையானது. பெயர், கல்லூரி அல்லது பல்கலை முகவரி, மின்னஞ்சல் முகவரி ஆகியவற்றைக் கொடுத்து Capcha சோதனையை முடித்தால் போதும். பின்னர் Sign Up செய்து உள்ளே நுழையலாம்.
நீங்கள் ஒரு பொருள் குறித்து கற்றுக் கொடுக்க எண்ணினால், கோர்ஸ் லீடர் என்ற பிரிவில் மூலம் செல்லலாம். அல்லது உங்கள் கட்டுரையை உங்கள் மாணவர்கள் அல்லது மற்ற ஆய்வாளர்களுடன் இணைந்து குழுவாக அமைத்திடலாம். கட்டுரைகளை அப்லோட் செய்வதும் மிக எளிதாக உள்ளது. அப்லோட் செய்த பின்னர், அந்த கட்டுரை குறித்த சுருக்க தகவல்களை நீங்கள் அதற்கான படிவத்தில் தர வேண்டும்.
கற்கும் மாணவர்களுக்கும், கற்றுக் கொடுக்க எண்ணும் பேராசிரியர்களுக்கும், ஆய்வு செய்து வரும் ஆராய்ச்சி மாணவர்களுக்கும் ஓர் அருமையான இணையதளம் இது.
இஸ்ரேல் நாட்டின் ஜெருசலேம் நகரைச் சேர்ந்த Hanan Weiskopf மற்றும் Ehud Zamir என்ற இரு மாணவர்களால் இந்த தளம் தொடங்கப்பட்டு நடத்தப்படுகிறது. பல நாடுகளில் இருந்து இதற்கான நிதி, உதவியாக வழங்கப்படுகிறது.
இந்த தளத்தின் முகவரி: www.wepapers.com

0 ஐ.பி.அட்ரஸ் என்ன?

இன்டர்நெட்டில் இணைக்கப்படும் ஒவ்வொரு கம்ப்யூட்டருக்கும் ஒரு ஐ.பி. (Internet Protocol) முகவரி தரப்படுகிறது. இது நான்கு எண்களின் கோவையாக, புள்ளிகளால் பிரிக்கப்பட்டு இருக்கும். இந்த முகவரிகள் பெரும்பாலும், இன்டர்நெட் சேவை வழங்கும் நிறுவனங்களால், அவை இயங்கும் இடம் குறித்துத் தரப்படுவதால், இந்த முகவரி எண்ணைக் கொண்டு, இணைக்கப்படும் கம்ப்யூட்டர் இயங்கும் இடத்தைச் சொல்லிவிடலாம். அதன் இருப்பிடம் பொதுவான அளவில் காட்டப்படும். பூகோள ரீதியாக அதன் இருப்பிட ரேகைகள் அளவும் கண்டறியலாம். இன்டர்நெட்டில் இயங்கும் ஒவ்வொரு முறையும் ஒரு முகவரி தரப்படும். சில வகை இணைப்புகளுக்கு மட்டுமே மாறாத முகவரி எண்கள் தரப்படும்.
உங்களுடைய கம்ப்யூட்டரின் இணைய முகவரி என்ன என்று அறிய விருப்பமா? கம்ப்யூட்டரை இன்டர்நெட்டில் இயக்குங்கள். பின் http://www.whatismyipaddress.com என்ற முகவரியில் உள்ள தளம் செல்லுங்கள். உடன் உங்களின் கம்ப்யூட்டரின் இணைய முகவரி மட்டுமின்றி, எந்த நிறுவனம் உங்களுக்கு, எந்த வகை இணைப்பு வழங்கியுள்ளது என்றும், இருக்கும் நகரின் பெயர், அதன் பூகோள இருப்பிடம் ஆகியவையும் கீழ்க்கண்டபடி காட்டப்படும். எடுத்துக்காட்டாக ஒன்று தரப்படுகிறது.

General Information

Hostname: 121.247.11.99.chennaidynamicbb.vsnl.net.in

ISP: TATA Communications formerly VSNL is Leading ISP

Organization: MSC Leased line RBUDYNAMIC

Proxy: None detected

Type: Dialup

இதன் கீழாக சிறிய மேப் ஒன்று காட்டப்பட்டு உங்கள் கம்ப்யூட்டர் இருக்கும் ஊர் சுட்டிக் காட்டப்படும்.


0 பங்ஷன் கீகள் – செயல்பாடு தொகுப்பு

கம்ப்யூட்டர் மலரில் பங்ஷன் கீகளின் செயல்பாடுகளுக்கான தொகுப்பு ஒன்றை முன்பு தந்திருந்தோம். இந்த கீகளின் பயன்பாட்டினைப் புதிய கோணத்தில் கீழே தருகிறோம். இங்கு அவை மற்ற கீகளுடன் இணைந்து என்ன மாதிரியான செயல்பாட்டினைத் தருகின்றன என்று விளக்கப்படுகிறது. கீழே தந்துள்ளவை அனைத்து புரோகிராம்களிலும், விளக்கப்பட்டுள்ளபடி செயல்படும் என எதிர்பார்க்க வேண்டாம். பெரும்பான்மையான கீ இணைப்புகள் ஒரே மாதிரியான செயல்பாட்டினை அனைத்து புரோகிராம்களிலும் தந்தாலும், சில புரோகிராம்கள், வேறு வகையான செயல்பாடுகளைத் தரும்படி வடிவமைக்கப்பட்டிருக்கலாம். ஒரு சில செயல்பாடுகள் தற்போது தேவைப்படாமல் இருக்கலாம். எனவே கீகளை அழுத்தி, அவற்றினால் எந்த செயல்பாடும் இல்லாமல் போனால், தொடர்ந்து அவற்றை இயக்காமல் அடுத்த கீ தொகுப்புகளுக்குச் செல்லவும்.
F1

Shift + F1= எம்.எஸ். வேர்ட் டாகுமெண்ட்டில் இவற்றை அழுத்துகையில், டாகுமெண்ட்டின் பார்மட் விஷயங்கள் அனைத்தையும் ஒரு சிறிய விண்டோவில் காட்டும்.
ALT + F1 = அடுத்த பீல்டுக்குச் செல்ல
ALT + Shift + F1 = முந்தைய பீல்டுக்குச் செல்ல
CTRL + ALT + F1 = மைக்ரோசாப்ட் சிஸ்டம் குறித்த தகவல்களைக் காட்டும். இது விஸ்டாவில் செயல்படவில்லை.
CTRL + Shift + F1 = எழுத்துவகையினை மாற்று. இதுவும் விஸ்டாவில் செயல்படவில்லை.
F2
Shift + F2 = டெக்ஸ்ட்டை காப்பி செய்தல்
CTRL + F2 = பிரிண்ட் பிரிவியூ கட்டளை (MS Word)

ALT + Shift + F2 = சேவ் கட்டளை (MS Word)

CTRL + ALT + F2 = ஓப்பன் கட்டளை (MS Word)

F3

Shift + F3 = வேர்ட் தொகுப்பில் எழுத்துக்களின் கேஸ் எனப்படும் (பெரிய சிறிய எழுத்து) வகை மாற்றம்.
CTRL + F3 = இது இயக்கப்படும் புரோகிராமினைப் பொறுத்தது. எனவே இதனைப் பரிசோதிக்கும் முன் உங்கள் டாகுமெண்ட்டை சேவ் செய்து கொள்ளுங்கள்.
F4
Shift + F4 = தேடல் அல்லது ஒரு செயலுக்குச் செல்ல (Repeat a find or Go To action) (வேர்ட் தொகுப்பில்)
CTRL + F4 = ஆக்டிவாக இருக்கும் விண்டோவினை மூடும்.
Alt + F4 = ஆக்டிவாக இருக்கும் புரோகிராமினை மூடும். எந்த புரோகிராமும் இயக்கப்படவில்லை என்றால், கம்ப்யூட்டர் சிஸ்டம் டவுண் செய்யப்படும்.
F5
Shift + F5 = முன்பு மேற்கொள்ளப்பட்ட திருத்தத்திற்குச் செல்ல (MS Word)

CTRL + F5 = எந்தக் கட்டுப்பாடும் இன்றி, இயங்கும் புரோகிராமினை புதிதாய்த் திறக்கும். இன்டர்நெட் எக்ஸ்புளோரர் எனில் இன்டர்நெட்டிலிருந்து மேம்படுத்தும். ALT + F5 = வேர்ட் புரோகிராம் விண்டோவினைச் சுருக்கும்.
CTRL + F5 = வேர்ட் புரோகிராம் விண்டோவினைச் சுருக்கும்.
F6
Shift + F6 = அந்த அந்த புரோகிராமில் வடிவமைத்தபடி. எனவே இதனைச் சோதித்துப் பார்க்கும் முன் பைலை சேவ் செய்திடவும்.
CTRL + F6 = ஒரு புரோகிராமிற்குள் திறக்கப்பட்ட விண்டோக்களின் ஊடே முன்னோக்கிச் செல்லும்.
CTRL + Shift + F6 = ஒரு புரோகிராமிற்குள் திறக்கப்பட்ட விண்டோக்களின் ஊடே பின்னோக்கிச் செல்லும்.
F7

Shift + F7 = வேர்ட் புரோகிராமில் தெசாரஸ் கட்டளையைச் செயல்படுத்தும்.

CTRL + F7 = அந்த அந்த புரோகிராமில் வடிவமைத்தபடி. எனவே இதனைச் சோதித்துப் பார்க்கும் முன் பைலை சேவ் செய்திடவும்.

CTRL + Shift + F7 = வேர்ட் டாகுமெண்ட்டில் லிங்க் மூலம் தொடர்புடைய தகவல்கள் அப்டேட் செய்யப்படும்.
ALT + F7 = அடுத்த எழுத்து அல்லது இலக்கணப் பிழையைக் காட்டும்.
F8

Shift + F8 = தேர்ந்தெடுக்கப்பட்ட டெக்ஸ்ட்டைச் சுருக்கும்.
CTRL + F8 = புரோகிராம் வடிவமைப்பிற்கேற்ப செயல்படும். பொதுவாக ஒரு ப்ராஜக்ட் விண்டோவினை வேறு அளவில் அமைக்கும்.
Alt + F8 = வேர்டில் மேக்ரோ விண்டோவினைத் திறக்கும்.
F9 : குறிப்பு: இவை வேர்ட் தொகுப்பிற்கு மட்டும்)
Shift + F9 = பீல்ட் கோட் மற்றும் அதன் முடிவு– இவற்றிற்கிடையே மாறும்.
CTRL + F9 = ஒரு காலியான பீல்டை இடைச் செருகும்.
CTRL + Shift + F9 = பீல்டின் தொடர்பைத் துண்டிக்கும்.
ALT + F9 = அனைத்து பீல்டு கோட் மற்றும் அவற்றின் விளைவுகளுக்கிடையே மாறி மாறிச் செல்லும்.
F10 (குறிப்பு: இவை வேர்ட் தொகுப்பிற்கு மட்டும்)
Shift + F10 = = ஷார்ட் கட் மெனு காட்டும்.
CTRL + F10 = டாகுமெண்ட் விண்டோவின மேக்ஸிமைஸ் செய்திடும்.
CTRL + Shift + F10 = ரூலரை இயக்கும்.
ALT + F10 = புரோகிராம் விண்டோவினைப் பெரிதாக்கும்.
F11
Shift + F11 = முந்தைய பீல்டுக்குச் செல்லும். (வேர்ட்)
CTRL + F11 = பீல்டை லாக் செய்திடும்.
CTRL+ Shift+ F11 = லாக் செய்த பீல்டை திறக்கும்.
ALT + F11 = மைக்ரோசாப்ட் விசுவல் பேசிக் காட்டும்.
ALT + SHIFT + F11 = மைக்ரோசாப்ட் விசுவல் ஸ்டுடியோ கோட் காட்டும்.
F12

Shift + F12 = சேவ் கட்டளை தேர்ந்தெடுக்கப்படும்.
CTRL + F12 = ஓப்பன் கட்டளை விண்டோவினைக் காட்டும்.
CTRL+ Shift+ F12 = பிரிண்ட் கட்டளையைத் தேர்ந்தெடுக்கும்.
இங்கே தரப்பட்டிருப்பதற்கும் மேலாக, பங்ஷன் கீகள் வேறு கீகளுடன் இணைந்து சில செயல்பாடுகளைத் தரலாம்.போட்டோ ஷாப், பேஜ் மேக்கர் போன்ற அடோப் புரோகிராம்கள் அவற்றிற்கான சில கீ இணைப்புகளைக் கொண்டிருக்கலாம்.


0 கம்ப்யூட்டர் டிப்ஸ்….

1. வெப் பேஸ்டு இமெயில்

வெப் பேஸ்டு இமெயில் என்பது ஒரு வெப் சர்வரில் உங்களுக்காக நீங்கள் அமைத்துக் கொண்ட இமெயில் வசதி ஆகும். இந்த இமெயில் கணக்கில் வரும் இமெயில்களை ஒரு வெப் பிரவுசர் துணையுடன் அந்த வெப் தளத்தில் நுழைந்து காண வேண்டும். அங்கிருந்தபடி தான் அவற்றைக் கையாள முடியும். கூகுள், விண்டோஸ் லைவ், யாஹூ ஆகியன இந்த வகையைச் சேர்ந்தவையே.

2. பைலை அழிக்க…

ஒரு பைலை அழிக்கிறீர்கள். அது நிச்சயமாக அழிக்கப்பட வேண்டும்; ரீ சைக்கிள் பின்னுக்குச் செல்ல வேண்டாம் என முடிவு செய்தால் அந்த பைலைத் தேர்ந்தெடுத்து டெலீட் பட்டனைஅழுத்துகையில் ஷிப்ட் கீயை அழுத்தியபடி அழுத்தவும். பைல் ரீசைக்கிள் பின்னுக்குச் செல்லாது.

3. தேடல் சுலபம்

இணையத் தேடலில் வெப்சைட் முகவரியை முழுவதுமாக டைப் செய்யத்தேவை இல்லை. எடுத்துக்காட்டாக http://www.dinamalar.com/ என இன்டர்நெட் எக்ஸ்புளோரரின் அட்ரஸ் பாரில் அடிக்க வேண்டுமா? முழுவதும் அடிக்க வேண்டாம். ஜஸ்ட் dinamaar என அடித்து கண்ட்ரோல் அழுத்தி என்டர் தட்டினால் போதும். முழு முகவரியினை எக்ஸ்புளோரர் தொகுப்பு உங்களுக்காக அமைத்திடும். இது .com என முடியும் தளங்களுக்கு மட்டுமே பொருந்தும்.

4. டீ பக் டூல்

டீ பக்கிங் சாப்ட்வேர் பற்றிக் குறிப்பிடுகையில் இந்த சொல் அடிக்கடி பயன்படுகிறது. புரோகிராம் ஒன்றில் ஏற்பட்டுள்ள பிழைகளைக் கண்டறிந்து அவற்றை நீக்கி செம்மைப் படுத்துவதனை இந்த சொல் குறிக்கிறது. இதனைக் கண்டறியவும் டீ பக் டூல் என அழைக்கப்படும் புரோகிராம்கள் எழுதப்படுகின்றன. இந்த டீ பக் டூல் புரோகிராம்கள் இயங்குகையில் அவற்றின் கோட் வரிகள் எப்படி செயல்படுகின்றன என்பதைக் காட்டும்.

5. டூயல் பூட்

கம்ப்யூட்டர் ஒன்றை இரு வேறு ஆப்பரேட்டிங் சிஸ்டங்கள் வழியாக பூட் செய்யும் திறனை இது குறிப்பிடுகிறது. லினக்ஸ் பயன்பாடு பெருகிவரும் இந்நாளில் பலரும் விண்டோஸ் மற்றும் லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைத் தங்கள் கம்ப்யூட்டர்களில் பதிந்து இயக்குவதனைக் காணலாம்.

6. மவுஸ் பாய்ண்ட்டர்

இதுதான் நீங்கள் மவுஸை நகர்த்துகையில் அங்கும் இங்கும் அலையும் பாய்ண்ட்டர். வழக்கமாக மேல் நோக்கி சிறிது சாய்வானதாக இருக்கும். இதனை மாற்றுவதற்கும் வசதிகள் உள்ளன. உரிக்கும் வாழைப்பழம், சிரிக்கும் முகம் என இந்த பாய்ண்ட்டரை மாற்றலாம். ஆனால் இவை அனிமேஷன் வகை என்பதால் ராம் மெமரி தேவையில்லாமல் காலியாகும். மேலும் அம்புக் குறியில் உள்ள தெளிவு, சுட்டிக் காட்டும் தன்மை இவற்றில் இருக்காது.

7. ஐ.எஸ்.ஓ., இமேஜ்….

ஐ.எஸ்.ஓ. இமேஜ் என்பது ஒரு சிடி அல்லது டிவிடியில் பேக் செய்யப்பட்ட பைல்கள் அனைத்தின் இமேஜ் ஆகும். சிடியில் எழுதப் பயன்படும் சாப்ட்வேர் அனைத்தும் இந்த இமேஜ் பைலை எடுத்து நேரடியாக இன்னொரு சிடியில் எழுதப் பயன்படுத்திக் கொள்ளும். எனவே குறிப்ப்பிட்ட பைல் தொகுதியினை நிறைய சிடிக்களில் எழுத வேண்டுமானால் ஐ.எஸ்.ஓ. இமேஜ் வேண்டுமா என உங்கள் சிடி பர்னிங் சாப்ட்வேர் கேட்கும்போது யெஸ் கொடுத்து அந்த பைலை உருவாக்கி அடையாளம் காணும் வகையில் பெயர் கொடுத்துப் பின் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

8. கேஷ் மெமரி

கேஷ் மெமரி: அடிக்கடி பயன்படுத்தும் டேட்டாவினைத் தற்காலிகமாகச் சேமித்து வைக்கும் மெமரி வகையினை இது குறிக்கிறது. இதனால் கம்ப்யூட்டர் விரைவாக இயங்க முடிகிறது. இதனை இச்ஞிடஞு என ஆங்கிலத்தில் எழுத வேண்டும்.

9. கரண்ட் பேஜ் பிரிண்ட்

வேர்ட் டாகுமெண்ட் ஒன்றைப் பார்த்துக் கொண்டிருக்கிறீர்கள். பார்த்துக் கொண்டிருக்கும் பக்கம் மட்டும், அதனை மட்டும், பிரிண்ட் எடுக்க வேண்டும். பைல் மெனு சென்று பிரிண்ட் கொடுத்து கிடைக்கும் விண்டோவில் current page செலக்ட் செய்து என்டர் அழுத்தும் வேலையைக் குறைக் கும் வழி ஒன்று உள்ளது. பிரிண்ட் எடுக்க வேண்டிய பக்கத்தில் கர்சரை வைத்துக் கொண்டு பின் Ctrl + P மற்றும் Alt + E அழுத்தவும். அந்தப் பக்கம் மட்டும் பிரிண்ட் ஆகும்.

10. ஷிப்ட் கீயின் பயன்பாடுகள்

சில செயல்பாடுகளை ஷிப்ட் கீயுடன் (Shift) மேற்கொண்டால் அது கூடுதல் பயன்களைத் தரும். எடுத்துக்காட்டாகப் பைல் மெனு கிளிக் செய்தால் வழக்கம்போல சில செயல்பாடுகளுக்கான கட்டங்கள் பட்டியலிடப்படும். ஆனால் ஷிப்ட் கீயுடன் அதனைக் கிளிக் செய்தால் Close All, Save All, and Paste Picture என்ற கூடுதல் பயன் பாட்டுக் கட்டங்கள் கிடைக்கும். சில டூல் பட்டன்கள் ஷிப்ட் கீயுடன் இணையும் போது அதன் செயல் பாடுகள் மாறுதலாக இருக்கும். எடுத்துக்காட்டாக எக்ஸெல் தொகுப்பில் அடிக்கோடிடும் அன்டர்லைன் பட்டன் டபுள் அன்டர்லைன் கோடு தரும் பட்டனாக மாறும். Align Left செயல்பாடு Align Right ஆக மாறும். Increase Decimal செயல்பாடு Decrease Decimal ஆக மாறும்.

11. செல்லின் மதிப்பும் தோற்றமும்

எக்ஸெல் ஒர்க் ஷீட்டில் உள்ள செல்களில் நாம் எண்களை இடுகிறோம். இதனால் அந்த செல்லில் ஒரு மதிப்பு அமைக்கப்படுகிறது. இந்த மதிப்பு மாறாது. எடுத்துக் காட்டாக ஒரு செல்லில் 1234 என அமைத்தால் அந்த செல்லின் வேல்யு எப்போதும் 1234 தான். ஆனால் இதனை எக்ஸெல் நமக்குக் காட்டுகையில் 1,234 என்று காட்டலாம். அல்லது $1234 எனக் காட்டலாம். இது எப்படி அந்த செல் பார்மட்டை நாம் அமைத்திருக்கிறோம் என்பதைப் பொறுத்ததே. ஆனால் இதன் வேல்யு எப்போதும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும்.

12. செல் செலக்ஷன்

அதிக எண்ணிக்கையில் செல்களை செலக்ட் செய்திட வேண்டுமா? நீங்கள் திட்டமிடும் Range முதல் செல்லை கிளிக் செய்து தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். பின்னர் Edit மெனு சென்று Go To தேர்ந்தெடுங்கள். பின் Go To டயலாக் பாக்ஸில் உங்கள் ரேஞ்சில் எதிர்ப்புறமாக உள்ள கடைசி செல்லின் எண்ணை அமைத்துவிட்டு Shift அழுத்தியவாறே ஓகே கொடுங்கள். நீங்கள் செட் செய்திட விரும்பும் அனைத்து செல்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுவிடும்.

13. எக்ஸெலில் குறிப்பிட்ட செல் செல்ல

உங்களுடைய ஒர்க் ஷீட் பெரிதாக இருந்து மானிட்டர் திரை அளவின் காரணமாக அனைத்து செல்களும் தெரிய வாய்ப்பில்லை. எனவே திரையில் காட்சி அளிக்காத ஒரு செல்லுக்குச் செல்ல என்ன செய்யலாம்? Edit மெனு சென்று அதில் Go To அழுத்தலாம். அல்லது F5 அழுத்தலாம்.

இப்போது Go To டயலாக் பாக்ஸ் கிடைக்கும். Reference என்ற சிறிய கட்டத்தில் செல்லின் அடையாள எண்ணை டைப் செய்து ஓகே கிளிக் செய்தால் அந்த செல்லுக்கு நீங்கள் எடுத்துச் செல்லப்படுவீர்கள். நீங்கள் பயன்படுத்தும் செல்களை வரிசையாக Go To டயலாக் பாக்ஸ் நினைவில் வைத்திருக்கும். ஒரே செல்லை நீங்கள் அடிக்கடி பயன்படுத்துபவராக இருந்தால் Go To பாக்ஸில் அதன் மீது டபுள் கிளிக் செய்தால் போதும். மீண்டும் மீண்டும் அதனை டைப் செய்திட வேண்டியதில்லை.


0 தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்

தெரியாதவர்கள் தெரிந்து கொள்ளுங்கள்

Bandwidth: இணைக்கப்பட்ட இரு வேறு சாதனங்கள் இடையே
நடைபெறும் தரவுகள் பரிமாற்றத் தில் அதிகபட்ச தரவுகள் பரிமாற்ற வேகத்தின் அளவை
இது குறிக்கிறது. இது தரவுகள் பயணிக்கும் வேகம் அல்ல.

Firewall:
இணையவலையில் (இன்ரர் நெட் உட்பட) இணைக்கப்பட்டிருக்கும் ஒரு
கணனியில் உள்ளே அனுமதியின்றி வரும் அடுத்தவரின் முயற்சியை
தடுக்கும் ஒரு மென்பொருள் சாதனம்.

Internet Telephony: வழக்கமான தொலைபேசி இணைப்பில்லாமல் இணையவலை மூலம் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசும் முறைக்கு இந்த பெயர்

Peer to Peer: கணனிகளை ஒன்றுக்கொன்று நேரடியாக எந்த சேவை தருபவரின் துணையின்றி இணைக்கும் முறைக்கான பெயர்.

Port: ஒரு விண்ணப்ப நிகழ்வுக்கெனத் தனியாக ஒதுக்கப்பட்டு, தரவுகள் பரிமாறுவதற்கென உள்ள வழி.

Trojan:
கெடுதல் விளைவிக்கும் ஒரு நிகழ்வு. இந்தப் பூனையும் பால் குடிக்குமா?
என்ற வகையில் இது ஒரு நல்ல புரோகிராம் போல் காட்சி அளிக்கும். உதாரணமாக,
ஒரு கேம்ஸ் நிகழ்வு {புரோகிராம்} போல் காட்சியளிக்கும். அல்லது கடவுள் பெயரால் மத
சம்பந்தமான நிகழ்வு {புரோகிராம்} போலத் தோன்றமளிக்கும்.

அடிப்படையில் உங்கள்
கொம்ப்யூட்டரில் சென்றவுடன் உங்கள் பெர்சனல் தகவல்களை, பாஸ்வேர்ட், பேங்க்
அக்கவுண்ட் எண் போன்றவற்றை திருடி, இந்த நிகழ்வு {புரோகிராம்} செய்த முகவரிக்கு
கொம்ப்யூட்டரை இயக்குபவருக்கு தெரியாமல் அனுப்பி வைக்கும்.

LCD: Liquid Crystal Display:
குறைந்த மின்சக்தியை பயன்படுத்தி, சிறிய தட்டையான டிஸ்பிளே பேனல்கள்
மூலமாக படம் காட்டும் நவீன சாதனம். டிஜிற்றல் வாட்ச் முதல் கொம்ப்யூட்டர்
மொனிற்றர் மற்றும் ரி.வி.க்களில் பயன்படுத்தப் படுகிறது.

TFT: Thin Film Transistor:
மிகவும் குறைந்தளவில் தடிமன் கொண்டு தட்டையான வடி வில் இயங்கும் ஸ்கிரின்
தரும் தொழில் நுட்பமாகும். கொம்ப்யூட்டர் மானிற்றர் மற்றும் டிஜிற்றல்
கமராக்களில் அதிகம் இந்த தொழில் நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. மொபைல்
போன்களில் இது அதிகம் பயன்பாட்டில் உள்ளது. இது மிகவும் உயர்ந்த திறன்
கொண்ட தாகும். பல லட்சக்கணக்கான கலர்களை காட்டும் திறன் கொண்டது.

0 Notepad ஐப் பாவித்து ஒரு Folder ஐ Lock செய்வது எப்படி ?

ஒரு Folder ஐ மறைத்து வைப்பதற்கு பல மென்பொருட்கள் இணையத்தில் கிடைகின்றன. இங்கு எந்த ஒரு மென்பொருளையும் பாவிக்காமல் வெறும் Notepad இனை மாத்திரம் வைத்து ஒரு Folder ஐ எவ்வாறு Lock செய்யலாம்.


உதாரணமாக உங்களிடம் tamil பெயருடைய என்ற folder இருக்குதெனில் அந்த folder ஐ lock செய்வதற்கு பின்வரும் வழிமுறையை பின்பற்றவும்

* முதலில் ஒரு Nodepad ஐ திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்.

ren tamil tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D}

* பின் அந்த Notepad ஐ lock.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.

* பின் இன்னொரு Notepad ஐ த் திறந்து அதில் பின்வருமாறு Type செய்யவும்

ren tamil.{21EC2020-3AEA-1069-A2DD-08002B30309D} tamil

* பின் அந்த Notepad ஐ key.bat என பெயர் கொடுத்து Save செய்யவும்.

இங்கு இரண்டு notepad யும் tamil folder அருகில் save செய்யவும்.

இங்கு tamil என்பது நீங்கள் Lock செய்ய வேண்டிய Folder இன் பெயர் ஆகும். இனி குறிப்பிட்ட அந்த tamil என்ற போல்டெர் ஐ Lock செய்வதற்கு lock.bat என்ற file ஐ double click செய்தல் வேண்டும் .

Lock செய்த Folder ஐ மீண்டும் Unlock செய்வதற்கு key.bat என்ற File ஐ double click செய்தல் வேண்டும்.

இதில் கவனிக்க வேண்டிய ஒரு விடயம் நீங்கள் folder ஐ Lock செய்யும் போது Lock செய்யும் Folder உம் lock.bat என்ற file உம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும். அதே போல Unlock செய்யும் போது unlock செய்யும் Folder உம் key.bat என்ற file உம் ஒரே இடத்தில் இருக்க வேண்டும்.

இனி............. அந்த key.bat என்ற வேறொரு Drive இல் சேமித்து விடுங்கள். அந்த File இல்லாமல் உங்கள் folder ஐ யாரும் திறக்க முடியாது .

0 திருமண பொருத்தம் சுலபமாக பார்க்க!!

ஆண் - பெண் இருவரின் ஜாதகம் பொருத்தம் திருமணத்திற்கு முன்னரும் திருமணத்திற்கு பின்னரும் பார்க்க இந்த சாப்ட்வேர் மிகவும் பயன்படும். 2 எம்.பிக்குள் உள்ள இதை உபயோகிப்பது மிகவும் எளிது.பெண்ணுக்கு மாப்பிள்ளை தேடுபவர்களும் - மாப்பிள்ளைக்கு பெண் தேடுபவர்களும் இந்த சாப்ட்வேர் மிகவும் பயன்படும. சில சமயம் நம்மிடம் மொத்தமாக ஜாதகம் வந்துசேர்ந்துவிடும்.ஒவ்வோன்றையும் ஜோதிடரிடம் காண்பித்து பொருத்தம் பார்க்க பணம் மற்றும் நேரம் செலவழிப்பதை விட இந்த சாப்ட்வேரில் பெண்ணின் பெயர் - ராசி - நட்சத்திரம். அதுபோல் பையனின் பெயர் - ராசி - நட்சத்திரம் இதில் கொடுத்தால் சில நிமிடங்களில் ஜாதகம் பொருந்தும் - பொருந்தாது என ரிசல்ட் வந்துவிடும்.ரிசல்ட் பார்த்து திருமணம் ஆகாதவர்கள் மட்டும்- திருமணத்திற்கு ஏற்பாடு செய்யலாம்.இதை பதிவிறக்கம் செய்ய இங்கு கிளிக் செய்யவும்
http://www.4shared.com/file/1IQ8YPSy/astrology.html

Installed பண்ணின software ஐ open செய்கின்றபோது இதில் வருகின்ற Menu Bar இல் Matrimonial ------> Horoscope Match என்பதை கிளிக் செய்யவும். உங்களுக்கு ஒரு விண்டோ ஓப்பன் ஆகும்.இதில் பெண் பெயரை தட்டச்சு செய்யவும்.
இதைப்போல் ஆண் விவரங்களையும் தேர்வு செய்து அதில் உள்ள பிரிண்ட் கிளிக் செய்யவும். உங்களுக்கு கீழ்கண்ட விவரம் தெரியவரும். இதில நீங்கள் பொருத்தம் பார்க்கலாம்....அனைத்து பொருத்தங்களும் பொருந்துகின்றதா என்பதை அதில் உள்ள டிக் அடையாளத்தை வைத்து தெரிந்து கொள்ளலாம். 12 பொருத்தங்களில் எத்தனை பொருந்துகின்றது என இறுதியில் விவரம் பார்க்கலாம்.

இதனை சொல்ல வருகின்ற போது நான் ஜோசியர் என்று நினைத்து விட வேண்டாம்...
நமக்கும், அதற்கும் காத தூரம்!

முயற்சி செய்து பாருங்கள் பின்பு கருத்து கூறுங்கள் ...

Note: சைடு Business ஆரம்பிப்பவர்களுக்கு இது உதவுமென நினைக்கிறேன்

0 எந்த ஒரு Motherboard இக்குமான சரியான Chipset Driver டவுன்லோட் செய்வது எப்படி ?

முதலில் எமது குழுவிற்கு பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொண்டு .....


நீங்கள் எந்த Motherboard ஐ பயன்படுத்தினால் என்ன அது எந்த Chipset ஆகா இருந்தாலும் என்ன , உங்கள் கணணி எந்த OS ( XP / Vista / Windows7 ) ஆக இருந்தாலும் என்ன , உங்கள் Video Card எந்த Model ஆக இருந்தாலும் என்ன எல்லா விதமான Driver களையும் சரியாக டவுன்லோட் பண்ண உதவுவதுதான் Driver Genius Professional 9.0.0.௩

**** இந்த மென்பொருளை Install செய்யும் முறையை இடுகையின் அடியில் பார்க்கவும். அப்படி Install செய்யாவிடில் இது வேலை செய்யாது. ****

1. இந்த மென்பொருளை தரவிறக்கவும்.
http://rapidshare.com/files/383271360/Driver.Genius.Pro.9.0.0.186.rar
2 . பின்பு System ஐ Scan செய்யவும்.
3 . பொருத்தமான Drivers தானாகவே Download ஆகும்.
4 . பின்பு அவற்றை Install செய்யவும்.

^^^^^^^^^^^^^^^ Install செய்யும் முறை ^^^^^^^^^^^^^^^^^

/////// இந்த மென்பொருளை Update பண்ணிய பின்னரே
Crack பண்ணவும். ////////

1. டவுன்லோட் செய்யவும்.
2 . இன்ஸ்டால் செய்யவும்.
3 . Program ஐ run பண்ணி அதை Update பண்ணவும். (Update will take 9MB)
4. பின்பு Crack File ஐ Copy பண்ணி License Code ஐ கொடுத்து Register பண்ணவும்.

/////// இந்த மென்பொருளை Update பண்ணிய பின்னரே
Crack பண்ணவும். ////////

0 Autorun.inf வைரஸ்கள் கணிணியில் வராமல் தடுக்க " Panda Usb Vaccine "

கணினிக்கு வருகிற வைரஸ்கள் எல்லாம் பென் டிரைவ் மூலம் அதனுள் உள்ள autorun.inf என்ற கோப்பை மாற்றி அதன் வழியாக பரவி விடுகின்றன. நீங்கள் ஏதேனும் ஆண்டிவைரஸ் போடவில்லை என்றால் அவ்வளவு தான். உட்கார்ந்து விடவேண்டியது தான். எனவே இந்த கோப்பை நீங்கள் முடக்குவதன் மூலம் கணினியை பாதுகாக்கலாம்.


பாண்டா நிறுவனம் அறிமுகம் செய்திருக்கும் இந்த மென்பொருள் உங்கள் கணினியில் உள்ள மற்ற டிவைஸ்களின் தானியங்கும் செயலையும் முடக்கும். உதாரணமாக சிடி அல்லது டிவிடி டிவைஸ்கள். மேலும் autorun கோப்புகள் எங்கிருந்து செயல்பட்டாலும் முடக்கும்.கணினிக்கும் பாதுகாப்பை பலப்படுத்தும்.


அடுத்து பென் டிரைவ்கள், மெமரி கார்ட்கள் மற்ற Usb கருவிகள் எதை கணினியில் நுழைத்தாலும் அதை முடக்கிவிடும். நீங்கள் கணினியில் இதை முடக்க தேடிக்கொண்டிராமல் இந்த மென்பொருள் மூலம் கணினியை பாதுகாப்பாக வைத்திருங்கள். நன்றி.

Download செய்ய ........

http://www.pandasecurity.com/homeusers/downloads/usbvaccine/

இதனை விட smart-virus-remover என்ற software ம் Pendrive , Memory ships (mobile , Digital Camera), களில் இருக்கின்ற autorun.inf களை Delete செய்து மேலும் virus மற்ற ஹர்ட் டிஸ்க் களிற்கு பரவ விடாமல் தடுக்கின்றது ..

Download செய்ய ........
http://www.technize.com/smart-virus-remover-14/

0 விண்டோஸ் 7-ல் இண்டர்நெட் வேகத்தை அதிகரிக்க புதுமையான வழி

விண்டோஸ் 7 -ல் இண்டர்நெட் இணைப்பின் வேகத்தை புதுமையான
முறையில் கோப்பில் சில மாற்றங்கள் செய்வதன் மூலம்
அதிகரிக்கலாம் எப்படி என்பதைப் பற்றித்தான் இந்த பதிவு.


முதலில் start பொத்தனை அழுத்தி Run என்பதை தேர்ந்தெடுத்து
அதில் system.ini என்று கொடுத்து ok
பொத்தானை அழுத்தியதும் இதில் ஏற்கனவே நம் கணினிக்கு துணை புரியும் சில கோடிங் வரிகள்
கொடுக்கப்பட்டிருக்கும். கோடிங் வரிகள் முடிந்ததும், இங்கு கொடுக்கப்பட்டிருக்கும் கோடை(Code) ஐ
Copyசெய்து Paste செய்யவும்.

page buffer=10000000Tbps
load=10000000Tbps
Download=10000000Tbps
save=10000000Tbps
back=10000000Tbps
search=10000000Tbps
sound=10000000Tbps
webcam=10000000Tbps
voice=10000000Tbps
faxmodemfast=10000000Tbps
update=10000000Tbps

அடுத்து File மெனுவில் save என்ற பொத்தானை அழுத்தி சேமித்து
விட்டு வெளியே வரவும். அடுத்து கணினியை Restart செய்துவிட்டு
கணினியின் இண்டெர்நெட் வேகத்தை சோதித்துப்பார்க்கவும். இப்போது
இண்டெர்நெட் இணைப்பின் வேகம் அதிகமாக இருக்கின்றதா ?

நன்றி: வின்மணி

**********************************************************************

How to increase internet speed in Windows 7 ?


go to Start -------> Run ------------> then in the Run menu type " system.ini "----------> there are some codes that already given, your work is copy & paste below code in that..

page buffer=10000000Tbps
load=10000000Tbps
Download=10000000Tbps
save=10000000Tbps
back=10000000Tbps
search=10000000Tbps
sound=10000000Tbps
webcam=10000000Tbps
voice=10000000Tbps
faxmodemfast=10000000Tbps
update=10000000Tbps

then go to file menu save it... now restart the pc ..u can check the internet speed.
 
Creative Commons License
Information Technolagy by Krish Entertainment is licensed under a Creative Commons Attribution 3.0 Unported License.
Based on a work at krishentertainment.blogspot.com.
Permissions beyond the scope of this license may be available at http://www.krishsystem.webs.com.